சிகிச்சைக்கு செல்கிறார் சஞ்சய் தத்.. கே.ஜி.எஃப் 2 படத்துக்கு சிக்கல்? படக்குழு வேறு திட்டம்!
சென்னை: நடிகர் சஞ்சய் தத் சிகிச்சைக்கு செல்வதால், கே.ஜி.எஃப் படத்துக்கு சிக்கல் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Recommended Video
கன்னடத்தில் உருவான 'கே.ஜி.எஃப்' படம் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு மொழிகளில் கடந்த 2018 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.
இந்தப் படம் அனைத்து மொழிகளிலும் வரவேற்பை பெற்றதை அடுத்து இதன் இரண்டாம் பாகம், கேஜிஎப் சாப்டர் 2 என்ற பெயரில் உருவாகி வருகிறது.

நடிகர் சஞ்சய் தத்
முதல் பாகத்தை இயக்கிய பிரசாந்த் நீல், இதையும் இயக்குகிறார். முதல் பாகத்தில் நடித்த ஶ்ரீனிதி ஷெட்டி இதிலும் ஹீரோயினாக நடிக்கிறார். ஆனந்த் நாக், மாளவிகா அவினாஷ் உள்பட பலர் நடிக்கின்றனர். இந்தி நடிகர் சஞ்சய் தத், அதீரா என்ற கேரக்டரில் வில்லனாக நடிக்கிறார். முதல் பாகம் ஹிட்டானதால், இரண்டாம் பாகத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

டிஜிட்டல் ரைட்ஸ்
இந்தப் படத்தில் ரவீணா டாண்டன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அக்டோபர் மாதம் படத்தை வெளியிட படக்குழுத் திட்டமிட்டிருந்தது. லாக்டவுன் காரணமாக அந்த திட்டம் மாற்றப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் கடந்த மாதம் தொடங்கியது. இதை படக்குழு தெரிவித்திருந்தது. இதன் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் வாங்கியதாகச் செய்திகள் வெளியாயின.

வரவேற்பு கிடைத்தது
இந்தப் படத்தில் அதீரா என்ற கேரக்டரில் நடிக்கும் நடிகர் சஞ்சய் தத்தின் லுக் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இன்னும் 15 நாள் படப்பிடிப்பு மட்டுமே பாக்கி இருக்கிறது. அதில் முக்கியமானது சண்டைக் காட்சி. அந்தக் காட்சியில் சஞ்சய் தத்தும் ஹீரோ யஷ்ஷூம் மோத வேண்டும்.

நடிகர் சஞ்சய் தத்
இந்நிலையில் நுரையீரல் புற்று நோய் காரணமாக, நடிகர் சஞ்சய் தத் சினிமாவுக்கு இடைவெளி விட்டுள்ளார். சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா செல்ல இருக்கிறார். இதனால், கே.ஜி.எஃப் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சஞ்சய் தத் இல்லாமல் அந்தக் காட்சியை எடுக்க முடியாது என்பதால் படக்குழு ஆலோசனையில் இருப்பதாக செய்திகள் வெளியானது.

டப்பிங் பேச வேண்டும்
இதுபற்றி படக்குழு கூறும்போது, 'சஞ்சய் தத் விரைவில் உடல் நலம் சரியாக வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம். படத்தில் பெரும்பாலான காட்சிகளை அவர் முடித்துவிட்டார். ஒன்றிரண்டு காட்சிகள் மட்டுமே பாக்கி இருக்கிறது. டப்பிங் பேச வேண்டும். அவர் விரைவில் உடல், நலம் பெற்று வந்து பேசுவார் என்று நம்புகிறோம்' என்று தெரிவித்துள்ளார். அவருக்காக காத்திருக்கவும் படக்குழு முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











