பொங்கலோ பொங்கல்.... சென்னையில் சூப்பராக கொண்டாடிய சஞ்சய் தத்

By Mayura Akilan

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் சென்னையில் உற்சாகமாக கொண்டாடியுள்ளார். சர்க்கரைப் பொங்கலின் சுவை அவரை கட்டிப்போட்டுவிட்டதாம்.

தமிழ் முறைப்படி வேஷ்டி, அணிந்து கரும்பு சாப்பிட்டு சஞ்சய் தத் பொங்கல் கொண்டாடியதோடு படப்பிடிப்புக் குழுவினரையும் உற்சாகத்தில் ஆழ்த்தினார்.

தமிழ் பண்டிகையை வடநாட்டவர்கள் கொண்டாடுவது தனி உற்சாகம்தான். சஞ்சய் தத் கொண்டாடிய பொங்கலை நீங்களும் பார்த்து ரசியுங்களேன்.

சாமி ரீமேக் போலீஸ் கிரி

சாமி ரீமேக் போலீஸ் கிரி

தமிழில் விக்ரம் நடித்து சூப்பர் ஹிட் ஆன சாமி இப்போது இந்தியில் ரீமேக் ஆகிறது. இதனை பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். ‘போலீஸ் கிரி' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ஹீரோவாக சஞ்சய் தத் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் கடந்த 15 நாட்களாக நடந்து வருகிறது.

படப்பிடிப்பில் பொங்கல்

படப்பிடிப்பில் பொங்கல்

படப்பிடிப்பின்போது பொங்கல் பண்டிகையை படப்பிடிப்பு அரங்கில் கொண்டாட இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் விரும்பினார். இதுதொடர்பாக சஞ்சயிடமும் கே.எஸ். ரவிக்குமார் கூறினார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சஞ்சய் தத்தும் உற்சாகத்தோடு சம்மதித்தார்.

பட்டு வேட்டி பட்டு சட்டை

பட்டு வேட்டி பட்டு சட்டை

சஞ்ய்தத்தும் கே.எஸ்.ரவிக்குமாரும் பட்டு வேட்டி உடுத்தி தமிழ் கலாசார முறைப்படி மாறினர். இருவரும் பொங்கல் பானையின் அடுப்பை பற்றவைத்தனர். பொங்கல் பொங்கும் போது உற்சாக குரல் எழுப்பினர் படப்பிடிப்புக்குழுவினர்.

பொங்கல் சூப்பர் டேஸ்ட்

பொங்கல் சூப்பர் டேஸ்ட்

பொங்கல் சமைத்த உடன் அதை சாப்பிட்ட சஞ்சய் தத் சுவையில் சொக்கிப் போனாராம். பொங்கல் அச்சா ஹை என்று பாராட்டினாராம். இந்தப் படத்தில் சஞ்சய் தத் உடன் ஜோடியாக பிராய்சி தேசாய் நடிக்கிறார். நம் ஊர் ரமேஷ் கண்ணாவும் நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X