தனிமையில் தவிக்கும் பாலிவுட் நடிகர்.. ஊரடங்கால் துபாயில் சிக்கிய குடும்பம்!

சென்னை : ஊரடங்கால் தன் குடும்பத்தை பிரிந்து இருக்கிறார் நடிகர் சஞ்சய் தத்.

கொரோனா பாதிப்பு காரணமாக நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் மக்கள் அனைவரும்மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். வீட்டுக்குள் அடங்கி இருக்கும் குடும்பங்களாவது யோகா செய்வது, உடற்பயிற்சி செய்வது, இன்டர்நெட், டிவி என்று காலத்தை கழித்து வருகின்றனர்.

anjay Dutts wife and children trapped in Dubai

ஆனால் பலர் தனது சொந்த வேலைகளுக்காக வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் சென்று அங்கேயே ஊரடங்கில் சிக்கிக்கொண்டதை நினைத்தால் பெரும் வேதனையை அளிக்கிறது. அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் குடும்பம் துபாயில் சிக்கிக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

நடிகர் சஞ்சய் தத் மும்பையில் வசித்து வருகிறார். மனைவி மற்றும் அவரது குழந்தைகள் அனைவரும் ஊரடங்கு நேரத்தில் துபாயில் மாட்டிக் கொண்டுள்ளனர். நடிகர்கள் பலர் தன் குடும்பத்துடன் எடுக்கும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு கொண்டிருந்த நிலையில், சஞ்சய் தத் தனியாக நடந்துகொண்டு இருக்கும் வீடியோவையும்,கொரோனா விழிப்புணர்வு வீடியோவையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

anjay Dutts wife and children trapped in Dubai

மனைவி மற்றும் குழந்தைகள் அனைவரும் அங்கே மிகவும் நலமாக இருப்பதாகவும் இன்டர்நெட்,வீடியோகால் மூலம் அடிக்கடி பேசிக்கொள்வதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. ஊரடங்கு விளக்கப்பட்ட பிறகு அவர்கள் இங்கே வருவதற்க்கு ஏற்பாடுகள் செய்துகொண்டு இருப்பதாகவும் சிலர் கூறி வருகின்றனர்..

anjay Dutts wife and children trapped in Dubai

குறிப்பிட்ட சில காரணங்களால் தன் குடும்பத்தை பல வருடம் பிரிந்த நடிகர் சஞ்சய். இப்பொழுது கொரோனாவால் மறுபடியும் பிரிந்திருக்கிறார். இதே போல் நடிகர் விஜய்யும் அவரது மகன் சஞ்சய்யும் பிரிந்து இருக்கின்றனர் .நாகினி புகழ் மௌனி ராய்யும் அவரது தாயும் பிரிந்து இருக்கின்றனர். சமீபத்தில் அவரது தாய் குளியலறையில் வழுக்கி விழுந்ததாகவும் ஆனால் அவரை பார்த்துக்கொள்ள முடியாத சூழலில் தான் இருப்பதாகவும் சமீபத்தில் அவர் இணையத்தளத்தில் வெளியிட்டு இருந்தார். இவ்வாறு பல பிரபலங்கள் தன் குடும்பத்தை பிரிந்து இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X