நடிகர் சஞ்சய் தத் மருத்துவமனையில் திடீர் அனுமதி.. எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என உருக்கம்!
மும்பை: புற்றுநோயுடன் போராடி வரும் நடிகர் சஞ்சய் தத் மருத்துவமனைக்கு செல்லும் முன்பு வீட்டு வாசலில் இருந்தப்படி தனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என உருக்கமாக கூறினார்.
Recommended Video
பிரபல பாலிவுட் நடிகரான சஞ்சய் தத்துக்கு கடந்த 9ஆம் தேதி கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சஞ்சய் தத்.
அப்போது அவருக்கு நுரையீரல் புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவரது நுரையீரல் 60 சதவீதம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ரசிகர்கள் சோகம்
ஏற்கனவே புற்று நோயால் சஞ்சய் தத்தின் மனைவியும் தாயும் பலியானார்கள். இதனை தொடர்ந்து சஞ்சய் தத்தின் சகோதரியான பிரியா தத் புற்றுநோய் அறக்கட்டளையை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகிறார். இந்நிலையில் சஞ்சய் தத்தும் புற்றுநோயால் தாக்கப்பட்டிருக்கும் தகவல் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

மருத்துவமனையில் அனுமதி
இதனை தொடர்ந்து தனக்கு நுரையீரல் புற்றுநோய் மூன்றாம் கட்ட நிலையில் இருப்பதாகவும், மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் டிவிட்டரில் தெரிவித்தார். இந்நிலையில் நடிகர் சஞ்சய் தத் நேற்று இரவு சிகிச்சைக்காக மும்பை கோகிலா பென் மருத்துவமனையில் உள்ள புற்று நோய் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

பிரார்த்தனை செய்யுங்கள்
மருத்துவமனைக்கு செல்லும் முன்பாக, வீட்டிற்கு வெளியே இருந்த ரசிகர்களிடம் தனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என உருக்கமாக கூறினார் சஞ்சய் தத். சஞ்சய் தத் வீட்டிற்கு வெளியே முகக் கவசம் அணிந்தப்படி தம்ப்ஸ் அப் செய்யும் போட்டோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

துபாயில் இருந்து திரும்பினார்
சஞ்சய் தத்துடன் அவரது மனைவி மான்யாதா தத்தும் உடனிருந்தார். கொரோனா லாக்டவுன் காரணமாக துபாயில் சிக்கியிருந்த மான்யாதா தத் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் துபாயில் இருந்து தனது குழந்தைகளுடன் மும்பை திரும்பினார்.

ஒரு சில நாட்களில் முடியும்
இந்நிலையில் அவர் விடுத்துள்ள அறிக்கையில்
கட்டாய தனிமைப்படுத்தல் காரணமாக இந்த கடினமான நேரத்தில் சஞ்சய் தத்துடன் தன்னால் மருத்துவமனையில் உடனிருக்க முடியாது என்றும், ஒருசில நாட்களில் இந்த ஹோம் குவாரண்டைன் முடிந்துவிடும் என்றும் கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











