என் வாழ்க்கையின் சமீபத்திய வடு இது.. நிச்சயம் இதை வெல்வேன்.. நடிகர் சஞ்சய் தத் டச்சிங்!
மும்பை: என் வாழ்க்கையின் சமீபத்திய வடு இதுதான், இதை வெல்வேன் என்று நடிகர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.
நடிகர் சஞ்சய் தத்துக்கு ஆகஸ்ட் மாதம் மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து, மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, நெகட்டிவ் என்பது தெரியவந்தது.

திரும்பி விடுவேன்
தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்த அவர், இரண்டு நாட்களுக்குப் பிறகு வீடு திரும்பினார். பின் திடீரென்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், 'மருத்துவ சிகிச்சைக்காக, நடிப்புக்கு சிறிது காலம் இடைவெளி விட்டிருக்கிறேன். கவலைப்பட வேண்டாம், உங்கள் அன்பாலும் வாழ்த்துகளாலும் விரைவில் திரும்புவேன்' என்று கூறி இருந்தார். இது பரபரப்பானது.

நுரையீரல் புற்றுநோய்
அவர் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு என்ன பிரச்னை என்று கேட்டு வந்தனர். இந்நிலையில் அவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பதாகவும் அதற்காக சிகிச்சை எடுக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின. இதுபற்றி அவரோ, அவர் குடும்பத்தினரோ எதையும்
வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.

உடல்நிலை
அதற்கான சிகிச்சை மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவருக்குத் தொடங்கப்பட்டது. இதற்கிடையே, சஞ்சய் தத் உடல்நிலை குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று அவர் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இந்நிலையில் மருத்துவ துறையை சேர்ந்த ரசிகை ஒருவருடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலானது.

ரசிகர்கள் கவலை
அதில் அவர் மிகவும் பலவீனமாக இருந்ததால் ரசிகர்கள் கவலை தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் சஞ்சய் தத், மும்பையில் சலூன் ஒன்றில் முடி வெட்டும் வீடியோவை ஹேர்ஸ்டைலிஷ்ட் ஆலிம் ஹக்கிம் வெளியிட்டுள்ளார். அதில், புதிய ஹேர்ஸ்டைலில் இருக்கும் சஞ்சய் தத், இப்போது பார்க்கிறீர்களே, இதுதான் என் வாழ்க்கையின் சமீபத்திய வடு. இந்த கேன்சரை நிச்சயம் வென்றுவருவேன் என்று கூறுகிறார்.

மீண்டும் வேலைக்கு
பின்னர் நவம்பர் மாதம் கே.ஜி.எஃப்: சாப்டர் 2 படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள இருக்கிறேன். அதற்காக தாடி வளர்க்கிறேன். நாளை (இன்று) ஷம்ஷேரா படத்துக்கு டப்பிங் பேசுகிறேன். மீண்டும் வேலைக்கு திரும்பியதில் மகிழ்ச்சி. இவ்வாறு சஞ்சய் தத் கூறியுள்ளார்.
யஷ் நடிக்கும் கே.ஜி.எஃப்: சாப்டர் 2 படத்தில் அதீரா என்ற வில்லன் கேரக்டரில் நடித்து வருகிறார் சஞ்சய் தத்.

கிளைமாக்ஸ் காட்சி
இதன் ஷூட்டிங் மங்களூரில் இப்போது தொடங்கி நடந்து வருகிறது. இதையடுத்து ஐதராபாத்தில் கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட இருக்கிறது. இந்தப் படத்தில் சஞ்சய் தத் தொடர்பான காட்சிகள் பெரும்பாலும் முடிவடைந்து விட்டன. சில காட்சிகள் மட்டுமே பாக்கி இருப்பதாக படக்குழு கூறி இருந்தது.


Click it and Unblock the Notifications