அதீரா ஆட்டம் ஆரம்பமாக போகுது.. கேஜிஎஃப் 2 டப்பிங்கை முடித்த சஞ்சய் தத்.. வேற லெவல் அப்டேட்!

சென்னை: கேஜிஎஃப் முதல் பாகத்தை பார்த்து கூஸ்பம்ப் ஆன ரசிகர்கள் அதன் இரண்டாம் பாகத்துக்காக நீண்ட நாட்கள் காத்திருக்கின்றனர்.

இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட கேஜிஎஃப் 2 திரைப்படம் கொரோனா காரணமாக அடுத்த ஆண்டு சம்மர் ரிலீஸை தேர்வு செய்துள்ளது.

இந்த படத்தில் வில்லன் ஆதீராவாக நடித்துள்ள பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தனது டப்பிங்கை தற்போது நிறைவு செய்துள்ளார்.

வெறித்தனமான வெற்றி

வெறித்தனமான வெற்றி

டோலிவுட், கோலிவுட் படங்கள் பாலிவுட் ரசிகர்களை அண்ணாந்து பார்க்க வைத்து வந்த நிலையில், முதன்முறையாக ஒரு கன்னட திரைப்படம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஆச்சர்யத்தில் அட போட வைத்தது. ராக்கி பாயாக யஷ் நடித்து மிரட்டிய கேஜிஎஃப் திரைப்படம் 250 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி கன்னட திரையுலகின் மார்க்கெட்டை உலகளவில் உயர்த்தியது.

கேஜிஎஃப் 2

கேஜிஎஃப் 2

தங்க சுரங்கத்தில் அடிமைகளாக வேலை செய்யும் மக்கள், மும்பை கேங்ஸ்டர் என மிரட்டல் கதையை இயக்கி ஹிட் கொடுத்த இயக்குநர் பிரசாந்த் நீல் இரண்டாம் பாகத்தை இன்னும் வெறித்தனமாக உருவாக்க பாலிவுட் நடிகர்களான சஞ்சய் தத் மற்றும் ரவீனா டாண்டனை இரண்டாம் பாகத்தில் இணைத்துள்ளார்.

டப்பிங்கை முடித்த அதீரா

டப்பிங்கை முடித்த அதீரா

இந்த ஆண்டு சம்மருக்கு வரும் என்றும் அக்டோபருக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்பட்ட கேஜிஎஃப் 2 திரைப்படம் கொரோனா பரவல் காரணமாக ஒரேயடியாக அடுத்த ஆண்டு சம்மருக்கு தள்ளிப் போனது. இந்நிலையில், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தற்போது தான் படத்தின் டப்பிங் பணியை முடித்துள்ளதாக இயக்குநர் பிரசாந்த் நீல் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஹாட்டான அப்டேட்டை கொடுத்துள்ளார்.

ஏப்ரல் 14 கன்ஃபார்ம்

ஏப்ரல் 14 கன்ஃபார்ம்

அதீரா மீண்டும் வந்து விட்டார். நன்றி சஞ்சய் தத் சார்.. அடுத்த ஆண்டு ஏப்ரல் 14ம் தேதிக்கு கேஜிஎஃப் 2 திரைப்படம் இந்திய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகும் என ட்வீட் போட்டு ரசிகர்களை உற்சாகமாக்கி உள்ளார். ராக்கி பாய்க்கும் அதீராவுக்கும் நடைபெற போகும் அந்த போரை காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

பிரபாஸ் படம் என்ன ஆச்சு

பிரபாஸ் படம் என்ன ஆச்சு

கேஜிஎஃப் 2 பட ரிலீஸ் அப்டேட்டை கொடுத்த இயக்குநர் பிரசாந்த் நீலிடம் நடிகர் பிரபாஸின் சலார் பட அப்டேட்டை கேட்டு டார்லிங் ரசிகர்கள் டார்ச்சர் செய்து வருகின்றனர். கேஜிஎஃப் 2 படத்தை ரிலீஸ் செய்து விட்டுத் தான் சலார் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X