ரன்வீர் சிங் நடிக்கும் பைஜு பாவ்ரா 2021 தீபாவளி ரிலீஸ்-சஞ்சய் லீலா பன்சாலி

மும்பை : சஞ்சய் லீலா பன்சாலி தீபாவளி தினத்தன்று தனது அடுத்த படம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கங்குபாய் கத்தியாவாடி திரைப்படம் முடிவடைந்த பிறகு, நடிகர் ரன்வீர் சிங் ஒரு கிளாசிகல் பாடகராக நடிக்கவிருக்கும் பைஜு பாவ்ரா திரைப்படம், 2021ஆம் ஆண்டு தீபாவளியன்று வெளியாகவுள்ளது, என்று அறிவித்துள்ளார். இந்த செய்தி பாலிவுட்டை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சஞ்சய் லீலா பன்சாலி பாலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர். அவர் தனது கங்குபாய் கத்தியாவாடி திரைப்படத்தின் படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக ஈடுபட்டுள்ளார்.

Sanjay Leela Bhansali’s next Film Baiju Bawra Movie will be released 2021 Diwali

தனது கனவு திரைப்படமான கங்குபாய் கத்தியாவாடி படத்தில் ஆலியா பட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அது முடிவடைந்த பின்னர் சஞ்சய் லீலா பன்சாலி தனது லட்சிய படமான பைஜு பாவ்ரா திரைப்படத்தை இயக்க உள்ளார்.

கடந்த 1952ஆம் ஆண்டு, மீனா குமாரி மற்றும் பரத் பூஷன் நடிப்பில், இதே பைஜு பாவ்ரா என்ற தலைப்பில் எடுக்கப்பட்ட படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. மியூசிக்கல் மெகா ஹிட் படமான இதற்கு, அப்போதே சுமார் 1.25 கோடி வரை வசூலானது குறிப்பிடத்தக்கது.

கங்குபாய் கத்தியாவாடி திரைப்படத்தின் அறிவிப்பு வந்தவுடன் திரையுலத்தினர் மற்றும் ரசிகர்களிடம் இருந்த ஆவல் மற்றும் உற்சாகம், இந்த பைஜு பாவ்ரா பற்றிய புதிய அறிக்கை இரட்டிப்பாக்கியுள்ளது.

மேலும் ரன்வீர் சிங் இப்படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்ற புதிய தகவல், அனைவரின் எதிர்பார்ப்பும் அதிகரித்து விட்டது. இதில் ரன்வீர்சிங் ஒரு கிளாசிக்கல் பாடகராக நடிப்பதோடு, பழிவாங்க துடிக்கும் ஒரு மேவ்ரிக் மேஸ்ட்ரோவின் கதையை மையமாக வைத்து எடுக்கப்படவுள்ளது என்ற ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் டைட்டில் மற்றும் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற நடிகர்கள் குறித்தும் மேலும் படம் சார்ந்த பல தகவல்கள் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X