கில்லி பட அப்பா ஸ்டைலில் விஜய்யின் ஆசை... ஆனால் மகன் சஞ்சய் எடுத்த அதிரடி முடிவு..?
சென்னை: கோலிவுட் டாப் ஹீரோவான விஜய்யின் மகன் சஞ்சய் கல்லூரி படிப்பை முடித்துவிட்டார்.
மகன் சஞ்சய்யும் அப்பா வழியில் ஹீரோவாக சினிமாவில் என்ட்ரி கொடுப்பார் என ரசிகர்கள் எதிபார்த்திருந்தனர்.
சூரரைப் போற்று இயக்குநர் சுதா கொங்கராவும் சஞ்சய்யை ஹீரோவாக நடிக்க வைக்கலாம் என்ற கனவில் ஒரு கதையுடன் காத்திருக்கிறார்.
ஆனால், சஞ்சய் தனது அப்பா விஜய்யின் பல வருட கனவுக்கே நோ சொல்லிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் மகன் சஞ்சய்
வாரிசு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லியோ ஷூட்டிங்கில் பிஸியாகிவிட்டார் விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. லியோ படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்னொரு பக்கம் விஜய் மகன் சஞ்சய் எப்போது சினிமாவில் என்ட்ரி கொடுப்பார் என்பதையும் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

விஜய்யின் கனவு
வேட்டைக்காரன் படத்தில் இடம்பெற்ற 'நான் அடிச்சா தாங்கமட்ட' என்ற பாடலில், விஜய்யுடன் செம்ம மாஸாக ஆட்டம் போட்டிருப்பார் சஞ்சய். அப்போது சஞ்சய்க்கு ஹீரோ லுக் இருப்பதாகவும், எதிர்காலத்தில் அவர் ஹீரோவாக நடிப்பார் என்றும் விஜய் ரசிகர்கள் கூறி வந்தனர். ஆனால், விஜய்க்கோ தனது மகன் சஞ்சய் கிரிக்கெட் வீரராக வேண்டும் என அதிக ஆசை இருந்ததாம். இந்தியாவின் பவர்ஃபுல் ஸ்போர்ட்ஸாக இருக்கும் கிரிக்கெட்டில் சச்சின், கங்குலி, டிராவிட், தோனி போன்ற பேட்ஸ்மேன்கள் வரிசையில் சஞ்சய்யின் பெயரும் இடம்பெற வேண்டும் என விஜய் அதிக ஆர்வம் கொண்டிருந்தாராம்.

நோ சொன்ன சஞ்சய்
சஞ்சய் கிரிக்கெட் வீரராக வேண்டும் என ஆசைபட்டதோடு, அதற்காக வீட்டின் மொட்டை மாடியிலேயே மினி கிரிக்கெட் கிரவுண்ட் ஒன்றை விஜய் செட்டப் செய்தாராம். அதோடு தனியாக கோச் ஒருவரையும் சஞ்சய்க்கு பிக்ஸ் செய்து கொடுத்துள்ளார். ஆனால், சஞ்சய்க்கு கிரிக்கெட் போரடிக்கவே அவர் சினிமா பக்கமே வந்துவிட்டாராம். அதுவும் ஹீரோ கேரக்டர் எல்லாம் வேண்டாம், ஒன்லி டைரக்ஷன் தான் என முடிவெடுத்துள்ளாராம்.

நெருங்கி வரும் ஹீரோ சான்ஸ்
கில்லி படத்தில் விஜய் கபடி கபடி என ஸ்போர்ட்ஸில் விருப்பமாக இருப்பார். அவரது அப்பாவாக நடித்த ஆசிஷ் வித்யார்த்தி, விஜய்யை நன்றாக படிக்க சொல்லி கட்டாயப்படுத்துவார். ஆனால், அதில் விஜய் அவரது விருப்பப்படி கபடி வீரராக தான் கெத்து காட்டுவார். அதேபோலவே ரியல் லைஃப்பில் விஜய் தனது மகனை ஸ்போர்ட்ஸ்மேனாக பார்க்க ஆசைப்பட, சஞ்சய் ரெடி, ஆக்ஷன், கட் என டைரக்ஷன் பக்கம் சென்றுவிட்டார். இதனிடையே அவரை ஹீரோவாக்கும் முயற்சியில் சுதா கொங்கரா இறங்கியுள்ளார்.

நோ ஹீரோ... ஒன்லி டைரக்ஷன்
இயக்குநர் சுதா கொங்கரா விஜய் மகன் சஞ்சய்க்காக ஒரு கதை தயார் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதில் சஞ்சய் ஹீரோவாக நடித்தால் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறாராம். இதுகுறித்து விஜய்யிடம் அவர் பேசியதாகவும், அதற்கு அவர் சஞ்சய் ஓக்கே சொன்னால் தாராளமாக படம் பண்ணுங்கள் என்று கூறியதாக தெரிகிறது. ஆனால், சஞ்சய் இயக்குநராக வேண்டும் என்பதில்தான் உறுதியாக இருக்கிறாராம். தற்போது குறும்படம் இயக்கி வரும் சஞ்சய், விரைவில் வெள்ளி திரையிலும் இயக்குநராக தடம் பதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











