Liplock video : ஆல்யா மானசாவுக்கு லிப்லாக் கொடுத்த சஞ்சீவ்..க்யூட் என கமெண்ட் செய்த ரசிகர்கள்!

சென்னை : காதலித்து திருமணம் செய்த சின்னத்திரை பிரபலங்களில் சஞ்சீவ் -ஆல்யா மானசா ஜோடி மிகவும் பிரபலம்.

இவர்கள் இருவரும் தற்போது சீரியல்களில் நடித்து வருகின்றனர். இனியா சீரியலில் ஆல்யாவும் கயல் சீரியலில் சஞ்சீவும் நடித்து வருகின்றனர்.

இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், வெளிநாட்டு சுற்றுப் பயணங்களிலும் இருவரும் கொண்டாட்டத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

Sanjeev and Alya manasas new Reels video with Lip lock makes fans feel more romantic

சஞ்சீவ் -ஆல்யா மானசா லிப்லாக் வீடியோ : சினிமாவில் இருப்பது போலவே சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து வருபவர்கள் பலர், காதலித்து திருமணம் செய்யும் சூழல்கள் காணப்படுகின்றன. அந்த வகையில் ராஜா ராணி சீரியலில் இணைந்து நடித்த சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். அடுத்தடுத்து இரண்டு குழந்தைகளுக்கும் பெற்றோர் ஆகியுள்ளனர். கர்ப்ப காலத்தின்போது பல ரீல்ஸ் வீடியோக்களை ரசிகர்களுடன் பகிர்ந்துக் கொண்டார் ஆல்யா.

இவர்களின் ஜோடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில், இருவரும் ரொமாண்டிக்காக அவ்வப்போது புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர். தற்போது குழந்தை பிறந்து சில மாதங்கள் ஆன நிலையில், சன் டிவியின் இனியா தொடரின் லீட் கேரக்டரில் ஆல்யா நடித்து வருகிறார். இதேபோல சஞ்சீவும் கயல் சீரியலில் ஹீரோவாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

Sanjeev and Alya manasas new Reels video with Lip lock makes fans feel more romantic

நடிகையாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள ஆல்யா, டான்சர், தொகுப்பாளர், யூடியூபர் என பல்வேறு தளங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் சிறப்பாக செயல்பட்டு பல்வேறு வீடியோக்களை பகிர்ந்துவரும் ஆல்யா, சமீபத்தில் தன்னுடைய கணவர் சஞ்சீவை வம்பிழுக்கும் வகையில் அண்ணா என்று கலாய்க்கிறார். மேலும் அவர்கள் வீட்டில் அடங்குவதே இல்லை என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

இந்நிலையில் அவர் தன்னுடன் நேரம் செலவழிப்பதில்லை என்ற ஆல்யாவின் குற்றச்சாட்டிற்கு வீடியோ மூலம் பதிலளித்துள்ளார் சஞ்சீவ். கடற்கரையில் ஆல்யாவுடன் ரீல்ஸ் வீடியோவை எடுத்துள்ள சஞ்சீவ், காதலிக்க ஆசையில்லை கண்கள் உன்னை காணும்வரை என்ற பாடலை பின்னால் ஒலிக்கவிட்டு மானசாவுடன் ரொமாண்டிக்காக செயல்படுகிறார். இறுதியில் நடந்தது தான் இந்த வீடியோவின் ஹைலைட்டே. மானசாவிற்கு இறுதியில் லிப் லாக்கும் கொடுக்கிறார்.

Sanjeev and Alya manasas new Reels video with Lip lock makes fans feel more romantic

அழகான உடையில், அழகான சூழ்நிலையில் இநத் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தன்னுடைய மனைவி தன்மீது கொண்டிருந்த மனத்தாங்கலை தற்போது நிவர்த்தி செய்துள்ளார் சஞ்சீவ். மிகவும் அழகான ஜோடியாக இவர்கள் பார்க்கப்படும் நிலையில், இத்தகைய வீடியோக்கள் மூலம் தங்களது வாழ்க்கையை ரசனை மிக்கதாகவும் அழகானதாகவும் இந்த ஜோடி உருவாக்கி வருகிறது. இவர்கள் வாழ்க்கையை குழந்தைகளும் கலர்புல்லாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X