செம்பாவுக்காக ராஜா ராணி சீரியலின் உதவி இயக்குனரை தாக்கிய கார்த்திக்
Recommended Video

சென்னை:ராஜா ராணி சீரியல் புகழ் சஞ்சீவ் உதவி இயக்குனரை தாக்கியுள்ளார்.
ராஜா ராணி தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானவர் சஞ்சீவ். அந்த சீரியலில் அவர் செம்பாவின்(ஆலியா மானசா) கணவர் கார்த்திக்காக நடித்து வருகிறார்.
செம்பா, கார்த்திக் ஜோடி ரசிகர்களிடையே ஹிட்டாகிவிட்டது.

கார்த்திக்
ரீலில் மட்டும் அல்ல ரியலிலும் மானஸா மீது சஞ்சீவ் அக்கறை கொண்டுள்ளார். மானஸா மீதுள்ள பாசத்தால் சஞ்சீவ் செய்த ஒரு காரியம் பிரச்சனையில் முடிந்துள்ளது.

மானஸா
மானஸாவுக்கும் ராஜா ராணி சீரியலின் உதவி இயக்குனருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாம். இதை பார்த்த சஞ்சீவ் பஞ்சாயத்து செய்கிறேன் என்ற பெயரில் தலையை நுழைத்துள்ளார்.

சஞ்சீவ்
மானஸாவுக்காக வரிந்து கட்டிக் கொண்டு போன சஞ்சீவ் உதவி இயக்குனரை கீழே தள்ளிவிட்டாராம். ஒரு நடிகர் உதவி இயக்குனர் ஒருவரை தள்ளிவிட்டுள்ளது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணி ராணி
முன்னதாக வாணி ராணி சீரியலின் உதவி இயக்குனர் அழகுவை நடிகர் பப்லு கன்னத்தில் அறைந்தார். அந்த பஞ்சாயத்து நடந்த கையோடு சஞ்சீவும் உதவி இயக்குனரை தாக்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications