விஜய்க்கு ரொம்ப பிடிக்கும்... பிரியாணியை டெடிகேட் செய்த சஞ்சீவ்

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 ல் இந்த வாரம் குடும்ப உறவுகள் வரும் ஃபிரீஸ் டாஸ்க் நடத்தப்பட்டது. இதில் அனைவரும் குடும்ப உறவினர்கள் வந்து, அன்பையும் போட்டியாளர்கள் பற்றிய தங்களின் கருத்தையும் பகிர்ந்து கொண்டனர்.

அனைவரின் குடும்பத்தை சேர்ந்தவர்களும் வந்தனர். ஆனால் தன்னை பார்க்க யாரும் வரவில்லை, தனது நடவடிக்கை பிடிக்கவில்லை என வராமல் இருந்து விட்டார்களா என அமீர் புலம்பிக் கொண்டிருந்தார். இதனால் மிகவும் சோகமாகவும் காணப்பட்டார். இந்நிலையில் இன்றைய எபிசோடின் துவக்கத்தில் காட்டப்பட்ட வெள்ளிக்கிழமை நிகழ்வில், அமீரை பார்க்க அவரை ஆதரிக்கும் குடும்பத்தை சேர்ந்தவர்கள் வந்தனர்.

பாவனியுடன் பழகாதே

பாவனியுடன் பழகாதே

இதனால் செம ஜாலியாகி விட்டார் அமீர். அவர்களும் நன்றாக விளையாடுகிறாய். ஆனால் பாவனியுடன் பழகுவது தான் உனது மைனஸ். அதை விட்டு விளையாட ஆரம்பித்தால் வேற லெவலில் இருப்பாய். எவ்வளவு பெரிய பிளாட்ஃபார்ம் கிடைத்துள்ளது. அதை சரியாக பயன்படுத்திக் கொள். பாவனியுடன் பழகுவதை ஒரு யுக்தியாக, அவரிடம் உள்ள காயினை கைப்பற்ற நீ பயன்படுத்தி இருக்கலாம் என்றனர்.

பிரியாணி டாஸ்க்

பிரியாணி டாஸ்க்

இதைத் தொடர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இந்தியா கேட் பாஸ்மதி ரைஸ் வழங்கும் பிரியாணி டாஸ்க் வழங்கப்பட்டது. போட்டியாளர்கள் ஒன்றாக சேர்ந்து இந்தியா கேட் பாஸ்மதி அரிசியை பயன்படுத்தி மட்டன் பிரியாணி செய்ய வேண்டும். பிறகு ஒரு அட்டையில் இந்த பிரியாணியை யாருக்கு டெடிகேட் செய்கிறீர்கள் என்பதை எழுதி, அதை அனைவரின் முன்னிலையிலும் படிக்க வேண்டும் என டாஸ்க் வழங்கப்பட்டது.

அப்பாவை நினைத்த ராஜு

அப்பாவை நினைத்த ராஜு

இதில் முதலில் பேசிய ராஜு, தனது அப்பாவுடன் சேர்ந்து தனது பிறந்தநாள் உள்ளிட்ட எந்த விழாவையும் கொண்டாடியதில்லை. அதனால் அவருக்கு இந்த பிரியாணியை டெடிகேட் செய்கிறேன் என்றார். பிரியங்கா தனது கல்லூரி மற்றும் விஜய் டிவி நண்பர்களுக்கு இதை டெடிகேட் செய்வதாக கூறினார்.

விஜய்க்கு பிரியாணி பிடிக்கும்

விஜய்க்கு பிரியாணி பிடிக்கும்

பிறகு பேசிய சஞ்சீவ், நாங்கள் 6 பேர் கொண்ட ஃபிரண்ட் கேங்கில் 3 பேர் கிறிஸ்தவர்கள். தளபதி விஜய், ஸ்ரீகாந்த், மனோஜ் ஆகிய மூன்று பேர் கிறிஸ்தவர்கள். அவர்களில் விஜய்க்கு மட்டம் பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும். இந்த சமயத்தில் நான் அவரை மிஸ் செய்கிறேன். இந்த சுவையான பிரியாணியை பார்க்கும் போது விஜய் நினைவு வருகிறது. இதை அவருக்காக டெடிகேட் செய்கிறேன் என்றார்.

குஷியான விஜய் ரசிகர்கள்

குஷியான விஜய் ரசிகர்கள்

நேற்று சஞ்சீவின் மனைவி ப்ரீத்தி வந்த போது விஜய் வாழ்த்து சொல்ல சொன்னதாகவும், விஜய் உனக்காக பிக்பாஸ் பார்க்கிறார் என்றும் சொன்னார். இந்நிலையில் இன்று விஜய்க்கு மட்டன் பிரியாணி பிடிக்கும், அவரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்ற தகவல் விஜய் ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X