மறக்க முடியாத காமெடி..மீண்டும் சிரிக்க வைத்ததற்கு நன்றி.. சஞ்ஜீவ் ட்விட் !
சென்னை : பத்ரி படத்தின் வரும் காமெடியை என்றும் மறக்க முடியாது மீண்டும் என்னை சிரிக்க வைத்ததற்கு நன்றி என நடிகர் சஞ்ஜீவ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Recommended Video
சஞ்ஜீவ் என்று இவரை அழைத்ததை விட செல்வம் என அழைத்ததுதான் அதிகம் அந்த அளவிற்கு பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது சன் டிவி யில் ஒளிபரப்பான திருமதி செல்வம் தொடர். சஞ்ஜீவ் தொடர்ந்து 17 வருடமாக சின்னத்திரையில் மின்னும் நாயகன். இது மட்டுமின்றி தளபதி விஜயின் நண்பனாக சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் நடித்த மெட்டிஒலி, ஆனந்தம், யாரடி நீ மோகினி தொடர்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றவை. தற்போது, சஞ்ஜீவ் தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டோ ஒன்றை வெளியிட்டார்.

அதில் சிறந்த டப்ஸ்மாஷ் என்று விஜய் அவர்கள் நடித்த பத்ரி திரைப்படத்தின் காமெடி காட்சி ஒன்று இருந்தது. விஜயின் நெருங்கிய நண்பரான இவர் சில படங்களில் அவருக்கு நண்பராக நடித்துள்ளார்.

இந்த படத்தில் அனைத்து காமெடி சீன்களும் நன்றாக இருக்கும் உடன் விவேக் அவர்களின் நடிப்பும் பிரமாதம். அரசு கல்லூரியில் மஜாவாக சுற்றி திரியும் இவர்கள் ஒரு நாள் தனியார் கல்லூரி பெண்கள் பஸ்ஸில் இருந்து இறங்குவதை பார்த்து கொண்டிருப்பார்கள். அதில் விஜய் ஆசைப்பட்ட பெண்னிடம் வேறு ஒருவன் பேசிக்கொண்டிருப்பான்.

அப்பொழுது விவேக் அவர்கள் பேசிக்கொள்வதை நகைச்சுவையாக டப் செய்வார். இன்று வரை அந்த காட்சி தொலைக்காட்சிகளில் வந்தால் சிரிப்பை அடக்க முடியாது. அந்த அளவுக்கு அந்த காமெடி மிகவும் நகைச்சுவையாக இருக்கும். இதை அந்த காட்சியை பெருமைப்படுத்தும் வகையில் சஞ்ஜீவ் அவர்கள் மீம்ஸ் ஒன்றை போட்டு என்னை மீண்டும் சிரிக்க வைத்ததற்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











