விஜய் வந்ததை தப்பா பேசினாங்க.. கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் இதுதான் நடந்தது.. ப்ரீத்தி பேட்டி!

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ், தன்னுடைய நீண்ட நாள் காதலனான ஆண்டனி தட்டிலை திருமணம் செய்து கொண்டார். இவருடைய திருமணம் கோவாவில் நடைபெற்றது. அந்த திருமண நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட ப்ரீத்தி திருமணம் குறித்து பல விஷயத்தை கூறினார்.

அவர் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், கீர்த்தி சுரேஷ், திருமணம் செய்து கொள்ள போவதாகவும், ஒருவரை காதலிப்பதாகவும், அவரின் பிறந்த நாளின் போது தான் என்னிடம் கூறினார். சஞ்சீவியுடன் அவர் அவ்வளவாக பேச மாட்டார். ஆனால், என்னுடன் என் தங்கை போலவே பல விஷயங்களை அவர் பகிர்ந்து கொள்வார். அப்போது, பிறந்தநாள் பார்ட்டியின் போது தான், இந்த விஷயத்தை என்னிடம் கூறினார். பல வருடங்களாக இருவரும் காதலித்த போதும், பெற்றோரின் சம்மதத்திற்காக இருவரும் காத்திருந்தனர். இருவரின் குடும்பத்திலும், முழுமையாக சம்மதம் தெரிவித்த பிறகு தான் திருமணம் செய்து கொண்டனர்.

keerthy suresh preethi

இரண்டு வருட பிளான்: கீர்த்தி சுரேஷின் திருமணத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என 400 பேர் வந்திருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக சென்று, பேசிய நலம் விசாரித்தார். அது எனக்கு மிகவும் பிடித்தமான விஷயமாக இருந்தது. ஏனென்றால், கீர்த்தி மற்றும் ஆண்டனி தட்டில் இருவருமே இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, நம்முடைய திருமணம் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று ஒரு பிளான் போட்டு வைத்திருந்தார்கள். அதன்படியே அவர்களின் திருமணம் மிகவும் அழகாக நடந்தது.

பொருத்தமானவர்கள்: பிராமின் முறைப்படி நடந்த திருமணத்தில் கீர்த்தி, மடிசார் புடவையில் மிகவும் அழகாக இருந்தார். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஆண்டனி தட்டில், தன்னுடைய காதலுக்காக மாறியது மட்டுமில்லாமல் அவர்களுடைய பெற்றோரும், மொத்தமாக மாறி, நாமம் வைத்துக்கொண்டு ஐயர் என்னென்ன, சம்பிரதாயம் செய்ய சொன்னாரோ அதை எல்லாம் மேடையில் செய்ததை பார்ப்பதற்கே மனம் நிறைவாக இருந்தது. கீர்த்தி சுரேஷுக்கு ஆண்டனி தட்டில் மிகவும் பொருத்தமானவர். கீர்த்தி சினிமாவிற்கு வருவதற்கு முன்பிருந்தே இருவரும் காதலித்து வந்துள்ளனர் கிட்டத்தட்ட 15 வருடங்களாக ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.

:

அதேபோல, கீர்த்தி சுரேஷ் புது தாலியுடன் பேபி ஜான் ப்ரோமோஷனுக்கு வந்ததை பார்த்து பல விதமான நெகட்டிவ் விமர்சனங்களை கூறி வருகிறார்கள். எந்த பெண் திருமணம் செய்து கொண்டாலும் அவர்களுக்கு என்று ஒரு அழகை கொடுப்பதுதான் அந்த மஞ்சள் கயிறு. அதை அணிந்து கொள்ள ஒவ்வொரு பெண்ணும் விருப்பப்படுவார்கள். நயன்தாராவும் திருமணம் செய்து கொண்டு இதே போல, தான் தாலி வெளியே தெரியும்படி போட்டோஷூட் எடுத்திருந்தார். ஆனால், கீர்த்தி சுரேஷ் பேபி ஜான் படத்தின் ப்ரோமோஷனுக்குத் தான் வந்திருந்தார். அந்த உடையில் தாலி தெரிந்தது. மற்றபடி அவர் வேறு எந்த இடத்திலும் தாலி தெரியும்படி உடை அணியவில்லை. நயன்தாரா செய்தால் தவறு இல்லை, கீர்த்தி சுரேஷ் செய்தால் மட்டும் அது தவறா?'

திருமணத்திற்கு விஜய் வந்ததையும் விமர்சனம் செய்தார்கள், விஜய் வருவார் என்று யாருக்குமே தெரியாது. சர்ப்ரைசாகத்தான் அவர் வந்தார். காலையில் திருமணம் முடிந்ததும் உடனே சென்று விட்டார். ஆனால், தப்பாக பேசினார்கள். இந்த சோஷியல் மீடியாவில் வரும் வதந்திகளை பார்த்தால் வாழவே முடியாது என்று ப்ரீத்தி அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X