அம்மாவுக்காக விளையாடுறேன்னு சொல்ற.. கேமில் மட்டும் ஃபோகஸ் பண்ணு.. அமீருக்கு அட்வைஸ் பண்ண ப்ரீத்தி!

சென்னை: பிக் பாஸ் வீட்டுக்குள் தனது கணவர் சஞ்சீவை பார்க்க மகன் மற்றும் மகளுடன் வருகை தந்த சின்னத்திரை நடிகை ப்ரீத்தி அமீருக்கு ஆறுதலையும் அட்வைஸையும் கொடுத்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

யார் வந்தாலும் தன்னை கண்டு கொள்ள வில்லை என ஏக்கத்தில் இருந்த அமீருக்கு வந்த உடனே நீங்களும் டான்சர் நானும் டான்சர் பரதநாட்டியம் என ஆரம்பித்து கடைசி வரையில் அமீரின் நலனுக்காக பேசி சென்றார் சஞ்சீவின் மனைவி ப்ரீத்தி

பாவனி பின்னாடி அமீர் போகாமல் இருந்தால் கடைசி வரை நிகழ்ச்சியில் தொடரலாம் என்கிற டிப்ஸையும் அவர் மறைமுகமாக கொடுத்து சென்றார்.

அமீருடன் பேசிய ப்ரீத்தி

அமீருடன் பேசிய ப்ரீத்தி

பிக் பாஸ் வீட்டுக்கு வரும் குடும்பத்தினர் பலரும் அமீர் மற்றும் பாவனியை ஒதுக்கி வைத்து பேசுவது போல பேசி வந்த நிலையில், வந்த உடனே அமீருடன் அன்பாக பேசி அரவணைத்தார் சின்னத்திரை நடிகையும் சஞ்சீவின் மனைவியுமான ப்ரீத்தி. நீங்க டான்ஸ் ஆடறதை பார்க்கும் போது எனக்கும் டான்ஸ் ஆட தோணும் நானும் டான்சர் தான் பரதநாட்டியம் என பேசி அமீருக்கு ஆறுதலை தந்தார்.

அம்மா இருக்கேன்

அம்மா இருக்கேன்

அம்மாவை கொலை செய்த கதையை சொல்லி அழுத அமீருக்கு ஆறுதல் சொல்லும் விதமாக அம்மாவாக நான் இருக்கிறேன். வெளியே நிறைய அம்மா இருக்காங்க நீ ஒண்ணும் கவலைப்படாதே அமீர் என ப்ரீத்தி பேசியது பிக் பாஸ் ரசிகர்களை உணர்ச்சிவசப்படுத்தியது.

காலில் பிரச்சனை

காலில் பிரச்சனை

அமீருடன் இணைந்து பிக் பாஸ் வீட்டில் நடனம் ஆடலாம் என நினைத்த ப்ரீத்திக்கு அமீர் காலில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக அவருடன் நடனமாட முடியவில்லையே என்கிற வருத்தம் உண்டானது. அனைத்து போட்டியாளர்களுக்கும் மீன் குழம்பு செய்து எடுத்து வந்த ப்ரீத்தி பிரியங்காவுக்கு ஸ்பெஷலாக வெஜ் ஐட்டத்தையும் எடுத்து வந்து கொடுத்திருந்தார்.

கேமில் மட்டும் ஃபோகஸ்

கேமில் மட்டும் ஃபோகஸ்

அம்மாவுக்காக விளையாடுறேன்னு சொல்ற அதை ஒழுங்கா பண்ணு.. கேமில் மட்டும் ஃபோகஸ் பண்ணா நல்லா விளையாடலாம், கடைசி வரை செல்லும் வாய்ப்பு கிடைக்கும் என பாவனி பின்னாடி செல்லாதே தேவையில்லாமல் சர்ச்சையில் சிக்காதே என மறைமுகமாக எச்சரிக்கும் தொனியில் ப்ரீத்தி கொடுத்த அட்வைஸையும் ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.

கேட்பதாக இல்லை

கேட்பதாக இல்லை

சஞ்சீவின் மனைவி இப்படி பேசிவிட்டு சென்ற பிறகாவது பாவனியிடம் அமீர் பேசாமல் இருப்பாரா என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அடுத்த நொடியே பாவனி மற்றும் அமீர் மீண்டும் ரகசியமாக பேசிக் கொள்ளும் காட்சிகளை போட்டு கடுப்பேற்றி விட்டனர்.

Recommended Video

AMIR பண்றதுலான் புதுசா இருக்கு! | Ashraf EXCLUSIVE| Bigg Boss Tamil, Pavani
அவங்களுக்கு அதுதானோ

அவங்களுக்கு அதுதானோ

எப்படி தாமரைக்கு சண்டை போட சொல்லி பிக் பாஸ் இயக்குநர் உத்தரவு போடுகிறாரோ அதே போல பாவனிக்கும் அமீருக்கும் லவ் டிராக் உருவாக்குவது போல எப்போதும் தனியாக அமர்ந்து கொண்டு பேசுங்கள் என சொல்றாங்களோ என்னவோ என்றும் நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X