அபிஷேக்கிற்கு கடைசி கிரேட்.. இமான், ராஜுவுக்கு ஏ கிரேட்.. விஜய் நண்பர் போட்ட ஸ்கோர் சரியா?

சென்னை: தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பரும் சின்னத்திரை நடிகருமான சஞ்சீவ் A கிரேட் முதல் F கிரேட் வரை பிக் பாஸ் ஹவுஸ்மேட்களுக்கு கொடுத்ததை பார்த்து ஏகப்பட்ட ஆர்மியினர் ஷாக் ஆகி உள்ளனர்.

சஞ்சீவ் வந்ததும் சில்லறைகளை சிதறவிட்ட பலபேர் அவரது இந்த அதிரடி முடிவால் ரொம்பவே அப்செட் ஆகி உள்ளனர்.

ரம்யா கிருஷ்ணன் விளையாடிய செம கேமில் சிக்கியது சக போட்டியாளர்களா? அல்லது சஞ்சீவா? என்பது திங்கட்கிழமை நாமினேஷனில் தெரிந்து விடும் என அவரே சொல்லியது தான் ஹைலைட்.

ரம்யா கிருஷ்ணன் கேம்

ரம்யா கிருஷ்ணன் கேம்

உலகநாயகன் கமல்ஹாசன் கொரோனா காரணமாக சிகிச்சை பெற்று வரும் நிலையில், ரம்யா கிருஷ்ணன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை நடத்துவது குறித்து ஏகப்பட்ட மீம்களும் வைரலாகி வருகின்றன. ரசிகர்கள் ஆதரவும், கமல் இல்லாத ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சன் டே எபிசோடில் செம கேம் ஆடி ரசிகர்கள் மத்தியில் ஸ்கோர் செய்துள்ளார் ரம்யா கிருஷ்ணன்.

சங்கடத்தில் சஞ்சீவ்

சங்கடத்தில் சஞ்சீவ்

வந்த உடனே ரம்யா கிருஷ்ணன் விஜய்யின் நண்பர் சஞ்சீவை சிக்கி சின்னாபின்னமாக வைப்பது போல ஹவுஸ்மேட்களுடன் கோர்த்து விட்டார். A முதல் F கிரேடு வரை ஹவுஸ்மேட்களை வரிசைப்படுத்தி கொடுங்க என சொல்லி சங்கடத்தில் சஞ்சீவை மாட்டி விட்டார்.

எஃப் கிரேடு

எஃப் கிரேடு

கடைசி இடத்தில் இருந்து ஆரம்பிக்கிறேன் என சொல்லி விட்டு முதல் ஆளாக அபிஷேக்கை காலி செய்வது போல F கிரேடை கொடுத்து இந்த வீட்டில் இருப்பதற்கு இவருக்கு தகுதியே இல்லை என்பதை மறைமுகமாக சொல்லி விட்டார். அபிஷேக்கை தொடர்ந்து, நிரூப் மற்றும் அக்‌ஷராவுக்கு அதே F கிரேடை சஞ்சீவ் கொடுக்க ரசிகர்கள் சற்றே ஷாக் ஆகிவிட்டனர்.

சி கிரேடில் பாவனி

சி கிரேடில் பாவனி

அக்‌ஷராவுக்கு F கிரேடு கொடுத்த சஞ்சீவ் பாவனிக்கு சி கிரேடு கொடுத்து பாவனியும் எப்போ பார்த்தாலும் அழுகிறார் என அசிங்கப்படுத்தி விட்டார். தாமரை செல்வி, அமீர் மற்றும் ஐக்கி பெர்ரிக்கு சி கிரேட் கொடுத்திருந்தார் சஞ்சீவ். ஐக்கி பெர்ரி இந்த வாரம் எலிமினேட்டே ஆகி விட்டார்.

பி கிரேடில் பிரியங்கா

பி கிரேடில் பிரியங்கா

விஜய் டிவியின் செல்லப் பிள்ளை பிரியங்காவுக்கு தான் இந்த சீசன் டைட்டிலையே தூக்கிக் கொடுக்கப் போகின்றனர் என ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், பி கிரேடில் பிரியங்காவை நிறுத்தி உள்ளார் சஞ்சீவ். அபிநய், சிபி மற்றும் வருண் உள்ளிட்டோரையும் இந்த இடத்தில் வைத்ததை ஏகப்பட்ட ரசிகர்கள் ஏற்கவில்லை.

முதலிடம்

முதலிடம்

சஞ்சீவை பொறுத்தவரையில் இந்த சீசனின் டைட்டிலை ராஜு அல்லது இமான் அண்ணாச்சி வின் பண்ணுவார் என பலமாக நம்புகிறார். 50 நாட்கள் வெளியே இருந்து நிகழ்ச்சியை பார்த்து விட்டு உள்ளே வந்த சஞ்சீவ் கணித்த கணிப்பை அபிஷேக், நிரூப் என பல போட்டியாளர்கள் மறுத்தனர்.

ரம்யா கிருஷ்ணன் பாராட்டு

ரம்யா கிருஷ்ணன் பாராட்டு

ஆனால், சரியாக அனலைஸ் பண்ணி சொல்லி இருக்கீங்க என பிக் பாஸ் சீசன் 5 ஷோவே இப்படித் தான் செல்லப் போகிறது என்பது போல ரம்யா கிருஷ்ணன் சஞ்சீவை பார்த்து பாராட்டியது ரசிகர்களை மேலும், ஷாக் ஆக்கியது. இன்னும் 50 நாட்கள் எப்போ பாஸ் முடியும் என்கிற நிலைமைக்கே ரசிகர்கள் வந்து விட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X