'திருமண நிச்சயதார்த்தம் உண்மைதான்.. மதம் மாறியது தனிப்பட்ட விருப்பம்..' பிரபல நடிகை பளீர்!

By

பெங்களூரு: தனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது உண்மைதான் என்று பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை சஞ்சனா கல்ராணி, ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தற்போது அவருக்கு லேப்ராஸ்காபி அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மருத்துவ மனையில் ஓய்வு எடுத்து வருகிறார்.

திருமண சர்ச்சை

திருமண சர்ச்சை

இதற்கிடையே அவர் அளித்துள்ள பேட்டியில் தனது திருமண சர்ச்சை குறித்து பரபரப்பாகக் கூறியுள்ளார். சஞ்சனா கல்ராணி, டாக்டர் டாக்டர் அஜீஸ் பாஷா என்பவரை திருமணம் செய்துகொண்டதாக சமூக வலைத்தளங்களில் போட்டோ ஒன்று சில மாதங்களுக்கு முன் வைரலானது.

திருமணம் ஆகவில்லை

திருமணம் ஆகவில்லை

சஞ்சனா கல்ராணியும், அஜீஸ் பாஷாவும் திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் ஒரு வருடமாக வசித்து வந்ததாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால் இதை நடிகை சஞ்சனா கல்ராணி மறுத்திருந்தார். இதற்கிடையே, சஞ்சனா, டாக்டர் அஜீஸ் பாஷா திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது.

நிச்சயதார்த்தம்

நிச்சயதார்த்தம்

சஞ்சனா கல்ராணியும், அஜீஸ் பாஷாவும் வெளிநாட்டில் திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதுபற்றி சஞ்சனாவின் அம்மா ரேஷ்மா கல்ராணி கூறும்போது, சஞ்சனாவுக்கு டாக்டர் அஜீஸ் பாஷாவுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஏப்ரல் மாதம் திருமணம் செய்துகொள்ள இருந்தனர்.

மதம் மாறினார்

மதம் மாறினார்

கொரோனா காரணமாகத் திருமணத்தைத் தள்ளி வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது என்று கூறியிருந்தார். இதற்கிடையே, நடிகை சஞ்சனா கல்ராணி, இஸ்லாம் மதத்துக்கு மாறியதற்கான டாக்குமென்ட் ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
அதில், 2018 ஆம் ஆண்டு அவர் மதம் மாறியதாகவும் தனது பெயரை மஹிரா என்று மாற்றி வைத்துக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வாய்ப்பு கிடைக்கலை

வாய்ப்பு கிடைக்கலை

இந்நிலையில் இப்போது சஞ்சனா அளித்துள்ள பேட்டியில், அதில் மறைப்பதற்கு ஏதுமில்லை என்று தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, 'எனது திருமண நிச்சயதார்த்தம் கொரோனாவின் போது நடந்தது. அந்தக் காலகட்டத்தில் கொண்டாடவோ, அதை தெரிவிக்கவோ வாய்ப்பு கிடைக்கவில்லை.

தனிப்பட்ட விருப்பம்

தனிப்பட்ட விருப்பம்

என் திருமணம் ஒரு தொண்டு நிறுவனத்தில் நடக்கும். இப்போது ஆன்மீகவாதியாகிவிட்டேன். நமாஸ் பற்றிய பயிற்சி மேற்கொண்டேன். அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கிறேன். நான் இஸ்லாம் மதத்துக்கு மாறியது என் தனிப்பட்ட விருப்பம். என் முடிவை அரசியலாக்கவோ, விமர்சிக்கவோ தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X