twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    போதைப் பொருள் வழக்கு.. சிறையில் இருக்கும் நடிகை சஞ்சனாவுக்கு 3 மாதத்துக்குப் பின் ஜாமீன்!

    By
    |

    பெங்களூரு: போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை சஞ்சனா கல்ராணிக்கு இன்று ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

    பெங்களூரில் போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    'சிங்கப்பெண்ணே’ - ஜீ5 வழங்கும் புதிய குடும்ப பொழுதுபோக்கு கிளப் ஷோ 'சிங்கப்பெண்ணே’ - ஜீ5 வழங்கும் புதிய குடும்ப பொழுதுபோக்கு கிளப் ஷோ

    போதைப் பொருட்களை பயன்படுத்தியது மற்றும் அதை விற்கும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக, சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கன்னட சினிமா

    கன்னட சினிமா

    கன்னடப்பட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ், கன்னட சினிமாவில் இளம் நடிகர், நடிகைகள் போதைப் பொருள் பயன்படுத்துவதாகப் புகார் கூறியிருந்தார். போதைப் பொருள் பயன்படுத்தும் நடிகர், நடிகைகளின் பெயர் பட்டியலையும் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் அவர் ஒப்படைத்தார். இது அப்போது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    கைது செய்தனர்

    கைது செய்தனர்

    இதையடுத்து விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீசார், நடிகைகள் ராகிணி திவேதியை செப்டம்பர் 4 ஆம் தேதியும் சஞ்சனா கல்ராணியை செப்டம்பர் 8 ஆம் தேதியும் கைது செய்தனர். அவர்கள் நண்பர்கள் உட்பட 14 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    குற்றப் பத்திரிகை

    குற்றப் பத்திரிகை

    இந்த வழக்கில், கடந்த மாத இறுதிக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. இதற்கிடையே, நடிகை ராகிணி, சஞ்சனா ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நிராகரிக்கப்பட்டன.

    உச்ச நீதிமன்றம்

    உச்ச நீதிமன்றம்

    பின்னர் நடிகை ராகிணி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே சஞ்சனா கல்ராணி சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது மருத்துவ காரணங்களின் அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்ட வேண்டும் என்று கேட்கப்பட்டது.

    மருத்துவ பரிசோதனை

    மருத்துவ பரிசோதனை


    மனுவை விசாரித்த நீதிமன்றம், சஞ்சனாவுக்கு வாணி விலாஸ் மருத்துவமனையில் பரிசோதனை நடத்த வேண்டும் என்றும், அந்த அறிக்கையை 10-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டது. அதன்படி மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    சஞ்சனாவுக்கு ஜாமீன்

    சஞ்சனாவுக்கு ஜாமீன்

    அதை விசாரித்த நீதிபதி ஶ்ரீனிவாஸ் ஹரீஸ் குமார், நடிகை சஞ்சனா கல்ராணிக்கு இன்று ஜாமீன் வழங்கினார். மாதம் ஒரு நாள் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராக வேண்டும் என்றும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து 3 மாதத்துக்குப் பிறகு சஞ்சனாவுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.

    English summary
    The Karnataka High Court on Friday granted bail to actor Sanjjanaa Galrani, who is i judicial custody in connection with the Sandalwood drug case.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X