'சகோதரியை விட சிறந்த தோழி..' 3 மாதத்துக்குப் பிறகு சோசியல் மீடியாவில்.. ஜாமீனில் வந்த ஹீரோயின்!

By

பெங்களூரு: ஜாமீனில் வந்திருக்கும் பிரபல நடிகை, நீண்ட இடைவெளிக்குப் பிறகு சமூக வலைதளப் பக்கத்துக்கு வந்திருக்கிறார்.

Recommended Video

போதைப்பொருள் விவகாரத்தில் சிறை சென்ற நடிகைகள்.. பெண் காவலரிடம் சிகரெட் கேட்டு தகராறு

போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் பெங்களூரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போதைப் பொருட்களை பயன்படுத்தியது மற்றும் அதை விற்கும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக, சிலர் கைது செய்யப்பட்டனர்.

சிறையில் அடைப்பு

சிறையில் அடைப்பு

இந்த வழக்கில் கன்னட நடிகை ராகிணி திவேதி, செப்டம்பர் 4 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இவரை அடுத்து, நடிகை சஞ்சனா கல்ராணி செப்டம்பர் 8 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவர்கள் நண்பர்கள் உட்பட 14 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

நடிகை ராகிணி, சஞ்சனா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுக்கள் சில முறை நிராகரிக்கப்பட்டன. இதனால் ராகிணி சார்பில் உச்ச நீதிமன்றத்தில், ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே சஞ்சனாவுக்கு மருத்துவ காரணங்களின் அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்ட வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.

மருத்துவ பரிசோதனை

மருத்துவ பரிசோதனை

அதை ஏற்ற நீதிமன்றம், சஞ்சனா கல்ராணிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. மாதம் ஒரு நாள் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்றும் விசாரணைக்கு ஒத்துழைக்கவேண்டும் என்ற அடிப்படையிலும் ஜாமீன் வழங்கப்பட்டது. இதனால் 3 மாத சிறைவாசத்துக்குப் பிறகு அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

வீட்டில் ஓய்வு

வீட்டில் ஓய்வு

வீட்டில் ஓய்வெடுத்து வரும் சஞ்சனா, குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுவதாகவும் வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், மீடியாவிடம் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் சில நாட்களுக்கு முன் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

சகோதரியை விட

சகோதரியை விட

கடந்த சில மாதங்களாக சோசியல் மீடியா பக்கம் வராத அவர், இப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்ஸ்டாவுக்கு வந்திருக்கிறார். ரசிகர் ஒருவர் அனுப்பிய போஸ்ட்டை இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸில் ஷேர் செய்துள்ளார். அதில், அவர் சகோதரி நிக்கி கல்ராணியுடன் இருக்கிறார். சகோதரியை விட சிறந்த தோழி யாரும் இல்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X