'நான் இப்போது குணமடைந்து வருகிறேன்..' ஜாமீனில் வெளிவந்த நடிகைக்குத் திடீர் அறுவை சிகிச்சை!
பெங்களூரு: பிரபல நடிகைக்கு திடீர் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளதை அடுத்து, தான் குணமடைந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பிரபல கன்னட நடிகை சஞ்சனா கல்ராணி. போதைப்பொருள் வழக்கில் சஞ்சனா கைதாகி இருந்தார்.
போதைப் பொருட்களை பயன்படுத்தியது மற்றும் அதை விற்கும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக, சிலர் கைது செய்யப்பட்டனர்.

சிறையில் அடைப்பு
இந்த வழக்கில் கன்னட நடிகை ராகிணி திவேதி செப்டம்பர் 4 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இவரை அடுத்து, நடிகை சஞ்சனா கல்ராணி செப்டம்பர் 8 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவர்கள் நண்பர்கள் உட்பட 14 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். பின்னர் இவர்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

உயர் நீதிமன்றம்
இதற்கிடையே சஞ்சனா கல்ராணி சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது மருத்துவ காரணங்களின் அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்ட வேண்டும் என்று கேட்கப்பட்டது. இதையடுத்து கர்நாடக உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

சிறையில் இருந்து
மாதம் ஒரு நாள் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராக வேண்டும் என்றும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதையடுத்து 3 மாதத்துக்குப் பிறகு நடிகை சஞ்சனா சிறையில் இருந்து வீட்டுக்குத் திரும்பினார். அங்கு ஓய்வு எடுத்து வந்தார்.

ரசிகர்கள் கவலை
இந்நிலையில், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதோடு, குணமடைந்து வருவதாகவும் வலிமையாக மீண்டு வருவேன் என்றும் அவர் பதிவிட்டிருந்தார். எதற்காக அவர், சிகிச்சை பெறுகிறார் என்பது தெரியாமல் அவர் ரசிகர்கள் கவலை அடைந்தனர்.
Recommended Video

லேப்ராஸ்கோபி
இந்நிலையில், அவர் லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. பெங்களூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவருக்கு இந்த அறுவைச் சிகிச்சை கடந்த செவ்வாய்க்கிழமை நடந்துள்ளது. இப்போது அவர் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











