twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    36 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் சங்கராபரணம்.. எஸ்பிபி, ஜானகி, வாணி ஜெயராம் பாடினர்!

    By Shankar
    |

    ஒரு காலத்தில் வெற்றிப் பெற்று பேசப்பட்ட படங்களில் சிலவற்றுக்கு மட்டுமே காலம் கடந்து நிற்கும் தகுதி இருக்கும். அவை பல ஆண்டுகள் கழித்து மறு வெளியீடு செய்கிற போதும் வெற்றி பெறும். இதற்கு அண்மை உதாரணமாக 'கர்ணன்', ஆயிரத்தில் ஒருவன் படங்களின் வசூல் சாதனையைக் கூறலாம்.

    இந்த வரிசையில் இணைகிறது காலத்தை வென்ற 'சங்கராபரணம்' படம். 1978-ல் அதாவது 36 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி வசூலில் சாதனை படைத்த தெலுங்கு படம் இது. ஆந்திராவில் ஓராண்டை தாண்டி ஓடியது இப்படம். தமிழ்நாட்டிலும் தெலுங்கிலேயே வெளியாகி வசூல் செய்தது.

    இந்த படத்தில் சோமயாஜுலு, மஞ்சுபார்கவி, ராஜலெட்சுமி, முரளி மோகன், துளசி நடித்திருந்தனர்.

    கே விஸ்வநாத்

    கே விஸ்வநாத்

    சங்கராபரணம் படத்தை இயக்கிய கே.விஸ்வநாத்துக்கு சிறந்த இயக்குநர் விருது கிடைத்தது. இசையமைத்த கே.வி.மகாதேவன், பின்னணிப் பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம் ஆகியோருக்கும் தேசிய விருதுகள் கிடைத்தது.

    36 ஆண்டுகளுக்குப் பிறகு

    36 ஆண்டுகளுக்குப் பிறகு

    இவ்வளவு சிறப்பு மிக்க இந்தப்படம் மீண்டும் இரண்டே கால் மணி நேரம் ஓடக்கூடிய படமாக மாற்றப்பட்டு, 36 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வரவிருக்கிறது.

    12 பாடல்கள்

    12 பாடல்கள்

    இந்த படத்தை நவீன தொழில்நுட்பத்தை கொண்டு மேலும் மெருகேற்றி, ஒலிக் கலவை செய்து தமிழில் டப் செய்து வெளியிடுகிறார்கள். இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட இப்படத்தில் 12 பாடல்கள் உண்டு. இந்த பாடல்களை தமிழில் உருவாக்கி உள்ளார்கள்.

    எஸ்பிபி - ஜானகி - வாணி ஜெயராம்

    எஸ்பிபி - ஜானகி - வாணி ஜெயராம்

    அன்று பாடிய அதே எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம், எஸ்.ஜானகியே மீண்டும் பாடியுள்ளனர். மீண்டும் இதற்கான ஒலிப்பதிவு நடந்தபோது எஸ்.பி.பி. நெகிழ்ச்சியில் கண்கலங்கி அழுதுவிட்டார். பின்னணி இசையும் அதேமாறாத இசைக்குறிப்புகளுடன் மீண்டும் இசைக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. டி.ஐ., டி.டி.எஸ். தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளர்கள்.

    பாலு மகேந்திரா

    பாலு மகேந்திரா

    பாடல்களை தமிழில் ராஜேஷ், மலர்வண்ணன், நாவேந்தர் எழுதியுள்ளார்கள். இப்படத்தில் பங்குபெற்ற சோமயாஜுலு, கே.வி.மகாதேவன், ஒளிப்பதிவு செய்த பாலுமகேந்திரா இன்று நம்மிடையே இல்லை. இதில் சிறுவனாக நடித்த துளசி, கதாநாயகியாகி இன்று அம்மா நடிகையாகிவிட்டார்.

    விரைவில் இசை வெளியீடு

    விரைவில் இசை வெளியீடு

    இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு இப்படி மொழிமாற்றம் செய்யப்படும் படம் உலகிலேயே ‘சங்கராபரணம்' படம் ஒன்றாகத்தான் இருக்கும். விரைவில் இதன் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமான முறையில் நடைபெற உள்ளது.

    இப்படத்தை டி.என்.ஆர்ட்ஸ் ரத்னம் வழங்கும் ஸ்ரீசபகிரிவாசன் மூவிஸ் தயாரிக்கிறது. பி.எஸ்.ஹரிஹரன், டி.பி.செந்தாமரைக்கண்ணன் தயாரிக்கிறார்கள்.

    English summary
    Epic Telugu movie Sankarabaranam will be dubbed in Tamil after 36 years.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X