வீடியோவே இருக்கு பாஸ்.. மீனாட்சி சௌத்ரியை தள்ளிவிட்டு நடிகருடன் ஒட்டிகிட்டு நின்ற ஐஸ்வர்யா ராஜேஷ்!

சென்னை: சினிமா பிரபலங்கள் சில நேரங்களில் மேடையில் நடந்து கொள்ளும் விதம் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவும். குறிப்பாக படத்தின் புரோமோசன் நிகழ்ச்சிகளில் நடிகர்கள் சில நேரங்களில் ஆத்திரப்படுவார்கள், சில நேரங்களில் மென்மையாக நடந்து கொள்வார்கள், சில நேரங்களில் சர்ச்சையைக் கிளப்புவார்கள், இப்படி எதாவது ஒன்றைச் செய்து படத்தின் ப்ரோமோசனில் முக்கிய அங்கம் வகிப்பார்கள். சிலர் சர்ச்சைகளை உண்டாக்குவார்கள் என்பதற்காகவே, படத்திற்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இல்லை என்றாலும், படக்குழு சார்பில் அவரை அழைத்துப் பேசச் சொல்லுவார்கள். இதனால் படம் மக்கள் மத்தியில் அதிக அளவில் சென்று சேரும் என படக்குழுவினர் கருதுகின்றனர். அதேபோல் மேற்குறிப்பிட்ட வகையில் படக்குழுவினரே நடந்து கொள்வார்கள். அப்படியான சம்பவம்தான் நடைபெற்றுள்ளது. அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில் பொங்கல் விழா என்பது மிகவும் முக்கியமான விழாவாக கொண்டாடப்படுகின்றது. இதற்காக அரசுகளும் தனியார் நிறுவனங்களும் தொடர் விடுமுறை விடுவதால், இந்த விடுமுறை நாளில் படங்களை ரிலீஸ் செய்து வசூலை அள்ளுவதை திரையுலகம் வாடிக்கையாகக் கொண்டுள்ளது.

aishwarya rajesh

அந்த வகையில அடுத்த ஆண்டு ஜனவரியில் கொண்டாடப்படவுள்ள பொங்கலுக்கு படங்களை ரிலீஸ் செய்ய திரையுலகினர் தயாராகி வருகின்றார்கள். தமிழினைப் பொறுத்தவரையில் அருண் விஜய்யின் வணங்கான், அஜித்தின் விடாமுயற்சி மற்றும் விக்ரமின் வீர தீர சூரன் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்படுகின்றது. இப்படியான நிலையில் தெலுங்கு சினிமா உலகத்தினரும் பொங்கலுக்கு படங்களை ரிலீஸ் செய்ய அறிவிப்புகளை மாறி மாறி அறிவித்து வருகின்றனர்.

aishwarya rajesh

பொங்கல் ரிலீஸ்: ஏற்கனவே தெலுங்கு சினிமாவைப் பொறுத்தவரையில், ஏற்கனவே பாலய்யாவின் டாகு மகராஜ், ராம் சரணின் கேம் சேஞ்சர் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆவதாக அறிவிப்புகள் வெளியானது. இந்நிலையில் பொங்கல் ரேஸில் நடிகர்கள் வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் மீனாட்சி சௌத்ரி ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படமான ' சங்கராநிதிக்கு வஸ்துன்னம்' படம் ரிலீஸ் ஆகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

aishwarya rajesh

சங்கராநிதிக்கு வஸ்துன்னம்: ரிலீஸ் தேதி தொடர்பாக அறிவிக்க சிறப்பு நிகழ்ச்சி ஒன்றினை படக்குழு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தப் படத்தில் வெங்கடேஷ்க்கு ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் மீனாட்சி சௌத்ரி என இருவருமே ஜோடியாக நடித்துள்ளனர். குறிப்பாக மீனாட்சி சௌத்ரி முதல் மனைவி கதாபாத்திரத்திலும், ஐஸ்வர்யா ராஜேஷ் இரண்டாவது மனைவி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

ஒட்டிக்கொண்டு: படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு தொடர்பான நிகழ்ச்சி மேடையில் மீனாட்சி சௌத்ரியும் வெங்கடேஷும் இணைந்து ஒன்றாக நின்றுகொண்டு இருந்தார்கள். உடனே மேடையில் அமர்ந்திருந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரையும் விலக்கி விட்டு, அதாவது மீனாட்சி சௌத்ரியை விலக்கி விட்டுவிட்டு, வெங்கடேஷ் உடன் ஒட்டுக்கொண்டு நின்றார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X