கேப்டன் விஜயகாந்தின் மருமகள் ஒரு வெள்ளைக்காரப் பெண்ணா?
நடிகர் சண்முகபாண்டியன் ஒரு வெள்ளைக்கார பெண்ணுடன் இருக்கும் போட்டோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
Recommended Video

சென்னை: வெள்ளைகார பெண்ணுடன் சண்முகபாண்டியன் இருக்கும் போட்டோ பல கேள்விகளை எழுப்பியுள்ளது. கேப்டன் என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் விஜயகாந்த் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வசனங்களை பல படங்களில் பேசி நடித்துள்ளார்.
ஒரு படத்தில்...
"தமிழ் என்பது கண்ணுமாதிரி... ஆங்கிலம் என்பது கண்ணுக்கு மேலே போடுற கண்ணாடி மாதிரி... கண்ணு முக்கியமா கண்ணாடி முக்கியமா?"
எனக் கேள்வி கேட்டு தமிழின் முக்கியத்துவத்தை உணர்த்தியிருப்பார்.

விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் கேப்டனின் திரை வாரிசாக சினிமாவில் நடித்துவருகிறார். சண்முகப்பாண்டியன் சகாப்தம் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.
முதல் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், இரண்டாவது படமான மதுரை வீரன் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. மூன்றாவதாக கேப்டன் விஜயகாந்துடன் "தமிழன் என்று சொல்" திரைப்படத்தில் நடிப்பதாக இருந்த நிலையில், விஜயகாந்தின் உடல்நிலை காரணமாக படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சண்முகபாண்டியன் ஒரு வெள்ளைக்கார பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். "பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்னுடைய...."என்று இடைவெளி விட்டு ஸ்மைலி போட்டுள்ளார்.
பெயரும் இல்லை, யார் என்றும் கூறவில்லை சூசகமாக ஏதோ சொல்ல வருகிறார் என எண்ணிய நெட்டிசன்கள், இவர்தான் விஜயகாந்தின் மருமகளா என கேள்வி எழுப்புகின்றனர்.


Click it and Unblock the Notifications











