சந்தானம் படத்தின் இரண்டாம் பாகம்... விரைவில் வெளியாகிறது அறிவிப்பு!
சென்னை : சந்தானம் நடிக்கும் படங்கள் என்றால் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என அவர் ஹீரோவாக நடித்த படங்கள் நல்ல விமர்சனங்களையே இதுவரை பெற்றுள்ளன.
காமெடியனாக இருந்து ஹீரோவான அவரது சினிமா பயணத்தில் குறிப்பிடத்தக்கது 'தில்லுக்கு துட்டு' படம். லொள்ளு சபா இயக்குனர் ராம்பாலா இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.
இந்தப் படம் கமர்ஷியலாக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது 'தில்லுக்கு துட்டு' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிக்கலில் சில படங்கள்
சந்தானம் ஹீரோவாக நடித்து வருத் 'சர்வர் சுந்தரம்', 'ஓடி ஓடி உழைக்கணும்', 'மன்னவன் வந்தானடி' ஆகிய படங்கள் ஃபைனான்ஸ் பிரச்னையில் முடங்கிக் கிடக்கின்றன. இந்நிலையில் 'தில்லுக்கு துட்டு' படத்தின் பார்ட் 2 எடுக்கும் முயற்சியில் சந்தானம் இறங்கியுள்ளார்.

தில்லுக்கு துட்டு
சந்தானம் ஹீரோவாக நடித்த படங்களிலேயே கமர்ஷியல் ரீதியாக வெற்றியடைந்தது 'தில்லுக்கு துட்டு' படம் தான். இந்தப் படத்தை 'லொள்ளு சபா' தொலைக்காட்சி நிகழ்ச்சியின் இயக்குநரான ராம்பாலா இயக்கினார்.

அடுத்த பாகம்
சந்தானம், ராம்பாலா இருவரும் இணைந்து 'தில்லுக்கு துட்டு' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளனர். தில்லுக்கு துட்டு படத்தின் முதல் பாகத்தை 'ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்' நிறுவனம் தயாரித்தது. தற்போது இரண்டாம் பாகத்தை சந்தானமே தயாரிக்க உள்ளார்.

சந்தானம் தயாரிப்பு
சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளிவந்த 'சக்க போடு போடு ராஜா' படத்தை விடிவி கணேஷ் பெயரில் தயாரித்ததைப் போலவே இந்தப் படத்தை இயக்குனர் ராம் பாலாவின் பெயரில் சந்தானமே சொந்தமாக தயாரிக்கவிருக்கிறார்.

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்தப் படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடிக்கும் ஹீரோயின் மட்டும் மாற்றப்படலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. 'தில்லுக்கு துட்டு 2' படம் தான் சந்தானம் நடிக்கும் முதல் இரண்டாம் பாக திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











