திரும்பவும் சந்தானம் படத்தில் ‘அடை.. தேன் அடை’.. கொண்டாட்டத்தில் ‘பிக் பாஸ்’ மதுமிதா ஆர்மி!
நடிகை பிக் பாஸ் மதுமிதா, சந்தானத்தின் டிக்கிலோனா படத்தில் இணைந்துள்ளார்.
சென்னை: சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் டிக்கிலோனா படத்தில் இணைந்துள்ளார் நடிகை மதுமிதா.
சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் படம் டிக்கிலோனா. பிரபல திரைக்கதை ஆசிரியர் கார்த்திக் யோகி இப்படத்தை இயக்குகிறார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷும், சோல்ஜர் பேக்டரி சார்பில் சினிஸும் மிகப்பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரிக்கின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நட்பே துணை படத்தில் நடித்த அனகா மற்றும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படத்தில் நடித்த ஷிரின் இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள்.

காமெடி பட்டாளம்
மேலும், யோகிபாபு, ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சித்ரா லெட்சுமணன், மொட்டை ராஜேந்திரன், ஷாரா என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே இதில் நடிக்கிறார்கள். பிரபல திரைப்பட விமர்சகர் இட்டிஸ் பிரசாந்தும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

மதுமிதா
ஏ1 படத்தின் வெற்றியை தொடர்ந்து சந்தானம் நடிக்கும் படம் என்பதாலும், மிகப்பிரம்மாண்டமான நட்சத்திர பட்டாளம் இடம்பெற்றுள்ளதாலும், டிக்கிலோனா படத்திற்கு ஏற்கனவே அதிக எதிர்பார்ப்பு உள்ளது. அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், இப்படத்தின் நட்சத்திரக்கூட்டத்தில் நடிகை மதுமிதாவும் இணைந்துள்ளார்.

ஜாங்கிரி
ஏற்கனவே சந்தானம், மதுமிதா காம்போ ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட கூட்டணி. ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் அவர்களது காமெடி பெரிதும் ரசிக்கப்பட்டது. அப்படத்தில் இருந்து தான் மதுமிதாவின் பெயருடன் ஜாங்கிரி என்ற பெயர் இணைந்தது.

வைரலாகும் செல்பி
எனவே இந்த படத்திலும் அவர்களது காமெடி கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பு தளத்தில் சந்தானமும், மதுமிதாவும் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இதனால் படம் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இந்த புகைப்படத்தை மதுமிதா ஆர்மியினர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











