சந்தானம் ஒரு முடிவோடுதான் இருக்கார்போல.. எழுத்தாளருடன் கூட்டணி.. அந்தப் படத்தின் மூன்றாவது பாகம் ரெடி?

சென்னை: நடிகர் சந்தானம் காமெடி ரோல்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக ஹீரோவாக நடித்துவருகிறார். ஒருசில படங்கள் மட்டுமே அவருக்கு வெற்றியை கொடுத்திருக்கின்றன. கடைசியாக அவர் நடித்திருந்த டிடி நெக்ஸ்ட் லெவல் படம்கூட பெரிய வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் தனது அடுத்த பட வேலைகளில் மும்முரமாக இறங்கிவிட்டார் சந்தானம்.

சிம்புவால் திரைத்துறைக்கு வந்த சந்தானம் கோலிவுட்டில் குறுகிய காலத்திலேயே டாப் காமெடி நடிகராக வளர்ந்துவிட்டார். ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ், கார்த்தி, ரவி மோகன் என அத்தனை ஹீரோக்களுடனும் நடித்திருக்கிறார். குறிப்பிட்ட வருடங்களுக்கு முன்னர் எல்லாம் ஹீரோ இல்லாமல்கூட தமிழ் படம் ரிலீஸாகும்; ஆனால் சந்தானம் இல்லாமல் ரிலீஸாகாது. அப்படித்தான் இருந்தது நிலைமை.

ஹீரோ ஆசை: ஃபுல் ஃபார்மில் சென்றுகொண்டிருந்த சந்தானத்துக்கு ஹீரோவாகும் ஆசை வந்தது. அதன்படி வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் கதையின் நாயகனாக அறிமுகமானார். படம் சுமார் ஹிட்தான். ஆனாலும் தொடர்ந்து ஹீரோவாக நடிப்பாது என்று முடிவு செய்து; 'தில்லுக்கு துட்டு', 'ஏ1', 'தில்லுக்கு துட்டு 2', 'டகால்ட்டி', 'பாரிஸ் ஜெயராஜ்', 'டிக்கிலோனா', 'சபாபதி' என வரிசையாக நடித்துக்கொண்டே இருக்கிறார்.

Santhanam Begins Work on New Crime Thriller Possible Dhilluku Dhuddu 3 with Writer Rajesh Kumar
Photo Credit:

பெரிய வெற்றி இல்லை: ஹீரோவாக மாறி மிகப்பெரிய வெற்றியை பெற்றுவிடலாம் என்றுதான் அவர் நினைத்திருந்தார். ஆனால் அவர் நினைத்ததுபோல் இல்லாமல் இந்தப் பயணம் அவருக்கு கொஞ்சம் கஷ்டமாகவே அமைந்திருக்கிறது. ஐந்து படங்கள் நடித்தால் அதில் ஒரு படம்தான் சுமாராவாவது ஹிட்டாகிறது. இருந்தாலும் மனம் தளராத சந்தானம் தொடர்ந்து ஹீரோவாக பயணம் செய்கிறார். கடைசியாக அவர் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் படம்கூட சுமார் ஹிட்தான்.

அடுத்த படம்: எப்படியாவது ஒரு மெகா ஹிட் படத்தை கொடுத்துவிட வேண்டும் ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கும் சந்தானம் இப்போது தனது அடுத்த பட வேலைகளை தொடங்கியிருக்கிறார். இப்படம் க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகிறது. இதற்காக எழுத்தாளர் ராஜேஷ் குமாரை நேரில் சந்தித்திருக்கிறார் சந்தானம். இதுகுறித்து ராஜேஷ் குமார் தனது முகநூல் பக்கத்தில், "சென்ற வாரம் எனக்கு ஒரு செல்போன் அழைப்பு. மறுமுனையில் பேசிய அந்தக் குரலைக் கேட்டதுமே யார் என்று எனக்கு புரிந்துவிட்டது.

நேரில் வந்த சந்தானம்: சார்..என்னோட அடுத்த படத்துல உங்க பங்களிப்பு வேணும். ஒரு க்ரைம் த்ரில்லர் சப்ஜெக்ட் கதை. நான் கோயமுத்தூர் வர்றேன். உங்க கூட ரெண்டு நாள் தங்கி கதை விவாதம் பண்ணனும் " என்று சொன்னார். சொன்னபடியே நேற்று வந்தார். கதை விவாதம் நல்ல முறையில் முடிந்து காமிராவுக்கு போஸ் கொடுத்த தருணம்.

பி.கு . படத்தின் தலைப்பு அநேகமாக தில்லுக்கு துட்டு- 3 என்று நினைக்கிறேன்" என குறிப்பிட்டிருக்கிறார். இந்தப் படத்தில் ராஜேஷ் குமாரின் பங்கு மட்டும் இருக்கிறதா இல்லை அவர் எழுதிய கதையையே சந்தானம் படமாக எடுக்கப்போகிறாரா என்பது மேலதிக அறிவிப்புகள் வரும்போது தெரியும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X