கொட நாட்டில் லட்டு கொடுத்து பிறந்த நாள் கொண்டாடிய சந்தானம்!

புளு ஒசன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் பி. சித்திரைச்செல்வன் தயாரிக்கும் படம் 'தலைவன்'. திரைப்படக் கல்லூரி மாணவர் ரமேஷ் செல்வன் இயக்கும் இந்தப் படத்தில் பாஸ் - நிகிஷா படேல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, நகைச்சுவை வேடத்தில் சந்தானம் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று ஊட்டி அருகே உள்ள கொடநாடு - மிலிட்டேன் பகுதியில் நடந்து வருகிறது. நடிகர் சந்தானத்துக்கு இன்று பிறந்த நாள். இதனை முன்னிட்டு படப்பிடிப்பு குழுவினர் ஐம்பது கிலோ எடைகொண்ட பெரிய கேக் வர வைத்திருந்தனர்.
படப்பிடிப்புக்கு காலை எட்டு மணிக்கு சந்தானம் வந்ததும் அந்த கேக்கை பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்தார். பிறகு படப்பிடிப்பில் கேக் வெட்டி தனது பிறந்தநாளை உற்சாகத்துடன் கொண்டாடினார். அவருக்கு கதாநாயகன் பாஸ், கதாநாயகி நிகிஷா படேல், தயாரிப்பாளர் சித்திரைச்செல்வன், இயக்குனர் ரமேஷ்செல்வன், ஒளிப்பதிவாளர் எஸ்.கே.பூபதி, நடிகர் ஜெயப்பிரகாஷ், விடிவி கணேசன், மோனிகா, மீரா கிருஷ்ணன் உட்பட அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.
பிறகு ஏற்பாடு செய்திருந்த 1000 லட்டுகளை மிலிட்டேன் கிராம மக்களுக்கு வழங்கினார். கிராம மக்கள் அவருக்கு உற்சாகத்துடன் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications











