வித்தியாசமான சண்டை காட்சிகளில் தெறிக்கவிடும் சந்தானம்.. டகால்டியில் முழு ஆக்சன் அவதாரம்!

By Staff

Recommended Video

Dagalty | Santhanam | Rittika Sen | Vijay Anand

சென்னை : டகால்டி படம் ஜனவரி 31ம் தேதியான இன்று வெளியாகி மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

படத்தில் சந்தானம், யோகிபாபு , ரீத்திகா சென், ராதா ரவி, தருன் ஆரோரா, சந்தானபாரதி மற்றும் மனோபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். படத்தை இயக்கி இருக்கிறார் விஜய் ஆனந்த் படத்தை தயாரித்து இருக்கிறார் எஸ்.பி.சௌதரி .

சந்தானம் தில்லுக்கு துட்டு 2 மற்றும் ஏ1 என தொடர்ந்து முழு நீல நகைச்சுவை படங்களில் நடித்து வந்தார். இதனையடுத்து நகைச்சுவை பொறுப்பை கொஞ்சம் இறக்கி வைத்து ஆக்ஷன் ஹீரோவாக களம் இறங்கி இருக்கிறார்.

Santhanam changed to Action genre film from Dagalty

சந்தானம் சக்க போடு போடு ராஜா படத்திலும் ஆக்சன் நாயகனாக நடித்து இருந்தார் . ஆனால் அந்த படத்தின் படுதோல்வி காரணமாக சந்தானம் தனது ஆஸ்தான காமெடிக்கே திரும்பி விட்டார் .

டகால்டி படத்தில் கட்டாயம் ஆக்சனில் அசத்தி விட வேண்டும் என்ற சந்தானத்தின் முடிவு பலித்திருக்கிறது . டகால்டி படத்தின் பிளஸ் என்று பலர் கூறுவது சந்தானத்தின் ஆக்சன் காட்சிகள் தான். அதில் சரியாக ஸ்கோர் செய்திருக்கிறார் .

இந்த படத்தின் ஆக்சன் காட்சிகளுக்காக தனி உழைப்பை கொடுத்திருக்கும் சந்தானத்திற்கு கண்டிப்பாக பாராட்டுக்களை கொடுக்கலாம். காமெடி மட்டுமே பிரதானமாக இயங்கி வந்த சந்தானத்திற்கு இந்த முயற்சியின் மூலம் வெற்றி கிடைத்திருக்கிறது என்றே சொல்லலாம் .

டகால்டி படத்தில் ஆக்சன் நாயகனாக சந்தானம் ஜொலிக்க மற்றொரு காரணம் படத்தின் சிறந்த ஒளிப்பதிவு . இதற்கு முன்பு சில படங்களில் சந்தானம் ஆக்சன் காட்சிகளில் நடித்து இருந்தார் அதில் எல்லாம் சந்தானத்தை முழு ஆக்சன் ஹீரோவாக ஏற்றுக் கொள்ள கடினமாக இருக்கும். ஆனால் இந்த படத்தில் கனகச்சிதமாக பொருந்திருக்கிறார் சந்தானம். இந்த வெற்றிக்கு பாதி பங்கு ஒளிப்பதிவாளர் தீபக் குமாருக்கே சேரும்.

டகால்டி படம் வெளியீட்டிற்கு முன் முன்னோட்டம் பார்த்துவிட்டு நாம் அனைவரும் எதிர்பார்த்தது. சந்தானம் மற்றும் யோகிபாபு காட்சிகள் தான் அதிகமாக இருக்கும் நகைச்சுவையில் இருவரும் ரசிகர்களை வயிறு குழுங்க சிரிக்க வைத்து விடுவார்கள் என்று தான். ஆனால் தற்போது நேர்மாறாக ஆக்சன் காட்சிகள் தான் அதிகமாக இருக்கிறது. இருந்தும் சந்தானம் யோகிபாபு இணைந்து வரும் காட்சிகளில் நகைச்சுவை வசனங்கள் கைதட்டு வாங்கி விடுகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X