காட்ஃபாதர் சிம்புவுக்காக கொள்கையை தளர்த்திய சந்தானம்: அப்படியே...
Recommended Video
சென்னை:தன் காட்ஃபாதர் சிம்புவுக்காக கொள்கையை தளர்த்தியுள்ளார் சந்தானம்.
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து காமெடியில் கலக்கிய சந்தானம் கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் மூலம் ஹீரோவானார். ஹீரோ ஆன பிறகும் தொடர்ந்து பிற ஹீரோக்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
திடீர் என்று ஒரு நாள் இனி நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று கூறி இயக்குநர்களை அதிர வைத்தார்.

வெற்றி
சந்தானம் ஹீரோவானதில் மகிழ்ச்சி தான். ஆனால் நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடிப்பது தான் சரியில்லை. அவர் காமெடியில் கலக்கிக் கொண்டே ஹீரோவாக நடித்தால் நன்றாக இருக்கும்.

சிம்பு
சந்தானம் தனது காட்ஃபாதர் சிம்புவுக்காக தனது கொள்கையை தளர்த்திக் கொண்டுள்ளார். சிம்பு இயக்கி நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சந்தானம். வளர்த்து விட்டவருக்காக அவர் இறங்கி வந்துள்ளார்.

காமெடி
சிம்புவுக்காக கொள்கையை தளர்த்திய சந்தானம் அப்படியே பிற ஹீரோக்களுக்காகவும் செய்தால் நல்லது. அவர் காமெடியை பல ஹீரோக்களே ரொம்பவும் மிஸ் பண்ணுகிறார்கள். இதை சந்தானம் புரிந்து கொள்ள வேண்டும்.

இமேஜ்
சந்தானம் ஹீரோவாக நடித்துக் கொண்டே பிற நடிகர்களின் படங்களில் காமெடி செய்தால் அவரின் இமேஜ் பாதிக்காது. அவர் ஹீரோவாகும் முன்பே ஹீரோக்களுக்கு இணையான கதாபாத்திரங்களில் தான் நடித்து வந்தார். அதனால் அவர் மீண்டும் காமெடி கதாபாத்திரங்களில் நடிக்க முடிவு செய்தால் இயக்குநர்கள் வெயிட்டான கேரக்டர் தான் கொடுப்பார்கள்.


Click it and Unblock the Notifications











