twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பெண்களை இழிவுபடுத்தி பேசுவதை சந்தானம் நிறுத்தனும், இல்லை என்றால்...

    By Siva
    |

    Santhanam condemned by women wing of IHRA
    சென்னை: படங்களில் பெண்களை இழிவுபடுத்துவது போன்று வசனம் பேசுவதாகக் கூறி நகைச்சுவை நடிகர் சந்தானத்திற்கு மனித உரிமைகள் கழக சர்வதேச அமைப்பின் மகளிர் அணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    ஜீவா, த்ரிஷா ஜோடி சேர்ந்துள்ள என்றென்றும் புன்னகை படத்தில் பெண் ஊழியர் ஒருவர் சந்தானத்திடம் அஞ்சு பத்துக்கு போகட்டுமா என்று கேட்க அவரோ நீ நன்றாகத் தானே இருக்க ஆயிரம், ஐநூறுக்கு போயேன் என்று இரட்டை அர்தத்தில் பேசிய வசனத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    இந்நிலையில் இது குறித்து மனித உரிமைகள் கழக சர்வதேச அமைப்பின் மகளிர் அணி நிர்வாக செயலாளர் கல்பனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    சந்தானம் எல்லா படங்களிலும் பெண்களை இழிவுப்படுத்துவது போல் வசனம் பேசி வருகிறார். மதுபாட்டிலும் கையுமாக போதையில் அவர் பெண்களை கொச்சைப்படுத்தி பேசும் வசனங்கள் பெண்களை புண்படுத்தி உள்ளது. இது போன்று வசனம் பேசுவதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல் சந்தானத்துக்கு எதிராக போராட்டம் நடத்த நேரிடும். தணிக்கை குழுவினர் இதுபோன்ற வசனங்களை நீக்கிவிட்டுத்தான் அனுமதி சான்று அளிக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    English summary
    Women wing of International human rights association condemned Santhanam for his double meaning dialogue in the movies which hurt the feelings of women.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X