சிம்பு சொன்னா நோ சொல்ல முடியாது.. STR 49 அப்டேட் தந்த பிரபலம்.. தரமான சம்பவம் இனிமே தான்
சென்னை: தமிழ் சினிமாவில் மொரட்டு சிங்கிளாக வலம் வரும் நடிகர் சிம்பு தற்போது தக் லைஃப் படத்தில் நடித்து முடித்து அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். கைவசம் 3 படங்களை வைத்திருக்கும் அவர் இளமையான நாயகனாகவும் பெண்களை கவரும் வாத்தியாராகவும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தில் முக்கியமான நடிகர் ஒருவர் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் அந்த நடிகரே அறிவித்துவிட்டார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சந்தானம். இதைத்தொடர்ந்து வீராசாமி, மன்மதன், வல்லவன் போன்ற படங்களில் காமெடியனாக நடிக்க தொடங்கினார். சினிமாவில் முதல் முறை வாய்ப்பு கொடுத்தவர் சிம்புதான் என சந்தானமே தெரிவித்திருக்கிறார். இதை என்றைக்கும் நான் மறக்கமாட்டேன் எனவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார். விழா நிகழ்ச்சிகள் மற்றும் தனிப்பட்ட முறையில் அளித்த பேட்டிகளிலும் சினிமா பயணம் குறித்து பேசும் சந்தானம் சிம்புவை பற்றி பேசாமல் இருந்தது கிடையாது. வாய்ப்பு கொடுத்தது சிம்புவாக இருந்தாலும் தனது திறமையால் உயர்ந்து நிற்பவர் சந்தானம். காமெடியனாக வந்து தற்போது ஹீரோவாக கலக்கி கொண்டிருக்கிறார்.

டிடி நெக்ஸ்ட் லெவல் ரிலீஸ்: இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் சந்தானம் நடித்திருக்கிறார். இப்படத்தில் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஹாரர் சீரிஸ் படங்களான தில்லுக்கு துட்டு, டிடி ரிட்டர்ன்ஸ் போன்ற படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர் தோல்வியை சந்தித்து வரும் சந்தானம் தற்போது டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார். இப்படம் வரும் மே 16ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதே நாளில் சூரி நடித்துள்ள மாமன் படமும் ரிலீஸ் ஆகிறது. இருவரும் காமெடியனாக கரியரை தொடங்கி ஹீரோவாக வளர்ந்துள்ளனர். தற்போது ஹீரோவாக நடித்துள்ள படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆவதால் சினிமா ரசிகர்களும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.
சிம்பு படத்தில் காமெடி: தொடர் தோல்வி படங்களை சந்தித்து வரும் சந்தானம் மீண்டும் காமெடி டிராக்கிற்கு மாறிவிட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த பொங்கல் தினத்தில் வெளியான மதகஜராஜா படத்தில் சந்தானம் காமெடி பெரிதளவில் பேசப்பட்டன. இயக்குநர் சுந்தர் சியும் சந்தானம் குறித்து பிரம்மிப்புடன் பேசியிருக்கிறார். அவரிடம் இருக்கும் டெடிகேசனை பார்த்து வியந்திருக்கிறேன் என்றும் தெரிவித்தார். மேலும் மறைந்த நடிகர் மனோபாலா படப்பிடிப்புக்கு வந்துவிட்டால் சந்தானம் குதூகலம் அடைந்துவிடுவார். அவருக்காக தனி நோட்டு போட்டு காமெடி வசனங்களை எழுதி வைத்திருக்கிறார் என்றும் இயக்குநர் சுந்தர் சி தெரிவித்தார். சமீபத்தில் நடிகர் ஆர்யாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் பேச்சு அடிபட்டது. அப்படத்தில் அவர் காமெடியனாக நடிக்க தயராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சிம்பு நடிக்கும் 49ஆவது படத்தில் காமெடியான கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் படத்தில் சிம்பு கல்லூரி ஆசிரியராக நடிக்க இருக்கிறார். இப்படத்தில் சந்தானம் முக்கிய பாத்திரத்தில் நடிப்பதாகவும் முழுக்க முழுக்க காமெடி நிறைந்ததாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தானம் அறிவிப்பு: சிம்பு படத்தில் நடிப்பது குறித்த செய்திகளாக சமீபத்தில் வெளியாகின. இதுகுறி்த்து சந்தானமும் வெளிப்படையாக தெரிவிக்காவிட்டாலும் சிரித்தபடியே கடந்து சென்றார். இந்நிலையில், எஸ்டிஆர் 49 படத்தில் சந்தானம் நடிக்க இருப்பதை உறுதி செய்துள்ளார். ;சமீபத்தில் சந்தானம் அளித்த பேட்டியில் ஒருநாள் சிம்பு சார் போன் பண்ணி என்னுடைய படத்தில் நீங்க நடிக்கிறீர்களா என கேட்டார். சிம்பு கேட்டால் முடியாது என்று சொல்ல முடியாது. அவர் கேட்டால் எப்போதும் ஓகேதான் என தெரிவித்தார். எனவே சந்தானம் நடிப்பது உறுதியாகியுள்ளது. மதகஜராஜா படத்தை போன்றே இப்படத்தில் சந்தானத்தின் காமெடி பஞ்ச் வசனங்கள் தரமாக இருக்கும் என நம்பிக்கையோடு ரசிகர்கள் இருக்கிறார்கள்.
சிம்பு - சந்தானம் காம்போ: சந்தானத்தின் வளர்ச்சிக்கு விதையாக சிம்பு இருந்திருக்கிறார். ஆனால், ஒருபோதும் நான் தான் சந்தானத்தை வளர்த்துவிட்டேன் என தற்பெருமை பேசியதில்லை. ஆனால், சந்தானம் அதனை மறக்காமல் இருக்கிறார். மேலும், அவரிடம் திறமை இருந்ததால் பெரிய நடிகராக மாறிவிட்டார் என்றும் சிம்பு தெரிவித்திருககிறார். இவர்களது காம்போவில் வந்த படங்கள் அனைத்து ஹிட் காமெடியாக அமைந்திருக்கிறது. மன்மதன், வல்லவன், காளை, வானம், வாலு, ஒஸ்தி, சிலம்பாட்டம் போன்ற பலடங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். வாலு, வல்லவன் பட காமெடி காட்சிகளை பார்த்து ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள், வாலு படத்தில் சந்தானம் - சிம்பு காம்பினேஷனும் ரசிக்கும் படி இருந்தன. படம் முழுக்க சிம்புவுடன் டிராவல் செய்வார் சந்தானம். இதுவரை காமெடி காட்சிகளுக்கு என்று தனியாக டிராக் இருந்தன. அதனை மாற்றியவர் சந்தானம். ஹீரோ ஒருவர் இருந்தால் காமெடியனும் இருக்க வேண்டும் என்ற விதிவிலக்கை மாற்றினார்.
காமெடி கிங்: 100க்கும் மேற்பட்ட படங்களில் ரஜினி, விஜய், அஜித், விஷால், ஆர்யா, தனுஷ், சிம்பு, சூர்யா ஆகியோரது படங்களில் காமெடியில் கலக்கியவர் சந்தானம். பெண்களை சித்தரித்து பேசினால் தான் சிரிப்பு வரும் என்ற சர்ச்சைகள் ஒரு பக்கம் இருந்தாலும், காமெடியை ரசிக்க வேண்டும் ஆராய்ச்சி பண்ணக்கூடாது என அவரே தெரிவித்திருக்கிறார். அதேபோன்று ஜூவா, கார்த்தி படங்களில் பெண்கள் வேடத்தில் வந்து அசர வைத்திருக்கிறார். சிங்கம்புலி படத்தில் தனக்கு பிடித்த பெண்ணை காதலிக்க வைப்பதற்காக பெண் வேடம் இடுவார். அச்சு அசல் பெண் போலவே வந்து சர்ப்ரைஸ் செய்தார் சந்தானம். அந்த காட்சியில் ஜீவா அவரை பின்தொடர்ந்து வாழ்ந்தா உன்கூடதான் என்ற வசனத்திற்கு தியேட்டரில் விசில் பறந்தன.

அதேபோன்று ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் மாடர்ன் கேர்ள் கிடைக்காத பட்சத்திற்கு சொக்க வைக்கும் சொக்க வைக்கும் என்ற வசனத்தால் கிறங்க வைத்தார். பெண் வேடமிட்டு நடித்து இளையதிலகம் பிரபுவையே வியக்க வைத்தார். சந்தானம் காமெடிக்கு என்றே படங்களை இயக்கிய இயக்குநர்களும் இருக்கிறார்கள். தற்போது தமிழ் சினிமாவில் படங்கள் நிறைய வருகின்றன. ஆனால், காமெடிதான் இல்லை என சினிமா ரசிகர்களும் ஏங்கி தவிக்கின்றனர். கடந்த 10 வருடத்திற்கு முன்பு சீரியஸான படங்களில் கூட காமெடி இருக்கும். இன்று சீரிஸான படங்களே காமெடியாகத்தான் வருகிறது என நெட்டிசன்கள் கலாய்க்கும் அளவிற்கு மாறிவிட்டது.


Click it and Unblock the Notifications











