யாரையும் உயர்த்தி பேசலாம்… தாழ்த்தி பேசக் கூடாது... சந்தானம் சர்ச்சை பேச்சு !
சென்னை : ஜெய்பீம் திரைப்படம் குறித்து நடிகர் சந்தானம், சூர்யாவுக்கு எதிரான கருத்தை கூறியுள்ளார்.
Recommended Video
ஜெய்பீம் திரைப்படம் குறித்து நடிகர் சூர்யாவுக்கு பாமகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, திரைத்துறையினர் பலரும் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் நிலையில் சந்தானம் சூர்யாவுக்கு எதிரான கருத்தை கூறியுள்ளார்.

ஜெய்பீம்
சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் நவம்பர் 2ந் தேதி அமேசான் பிரைமில் வெளியானது. 28 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு கொடூர நிகழ்வை இன்றைக்குத் தமிழகம் முழுவதும் பேசு பொருளாக்கிய ஜெய்பீம் படக்குழுவுக்கும், ஜெய்பீம் படத்தை ஒரு கலைப்படைப்பாக மாற்றிய சூர்யா மற்றும் ஜோதிகா அவர்களுக்கும், இயக்குநர் ஞானவேல் அவர்களுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

காட்சி மாற்றப்பட்டது
இப்படத்திற்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பெயரை படத்தின் வில்லன் கதாபாத்திரத்துக்கு வைத்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. இதேபோல், குற்றவாளி கதாபாத்திரத்தின் பின்பக்கம் வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டத்தை காட்டியதாகவும் விமர்சனம் எழுந்தது. இதை தொடர்ந்து இந்த காட்சி மாற்றப்பட்டது.

தேவையில்லாதது
இந்நிலையில், சந்தானம் நடித்துள்ள சபாபதி திரைப்படத்தின் ப்ரோமோசன் நிகழ்ச்சியில் பேசிய சந்தானம், சினிமாவில் ஒரு தரப்பை உயர்த்தி பேசுவதோடு நிறுத்திக் கொள்ளலாம், மற்ற தரப்பை தாழ்த்திக் காட்டுவது சரியானது அல்ல என்றார் .மேலும் பேசிய அவர், 2மணிநேரம் எந்தவித பாகுபாடும் இன்றி திரையரங்கில் ஒன்றாக அமர்ந்து மக்கள் பார்க்கும் படத்தில் சாதி, மதத்தை புகுத்துவது தேவை இல்லாதது என்று கூறினார்.

சபாபதி
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம், தற்போது படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அவரது நடிப்பில், சபாபதி திரைப்படம் வரும் 19ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. இப்படத்தின் போஸ்டர் தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளது. தண்ணீர் திறந்துவிடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம், திரண்டு வாரீர் என எழுதப்பட்டுள்ள சுவரின் மீது சந்தானம் சிறுநீர் கழிப்பது போன்ற புகைப்படத்துடன் அந்த போஸ்டர் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.


Click it and Unblock the Notifications