செகண்ட் லுக்கா.. சகீலா பட போஸ்டரா.. என்ன சந்தானம் சாரே.. இப்படி முற்றும் துறந்துட்டீங்க!

சென்னை: மூன்று ரோல்களில் நடிகர் சந்தானம் கலக்கவுள்ள டிக்கிலோனா படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.

Recommended Video

Dikkilona Second Look | Santhanam, Karthick Yogi • Review

இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம், அனாகா, ஷிரின், யோகி பாபு, முனிஷ்காந்த், ஹர்பஜன் சிங் உள்ளிட்டோர் நடிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

லாக்டவுன் முடிந்தவுடன் படத்தை ரிலீஸ் செய்ய தீர்மானித்துள்ள சந்தானம், தற்போது விளம்பர பாணியில் வேகம் காட்ட துவங்கியுள்ளார்.

மூன்று கெட்டப்

மூன்று கெட்டப்

இன்று நேற்று நாளை படத்தை போல காமெடி டைம் மெஷின் கதையாக டிக்கிலோனா உருவாகி இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. நேற்று வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் மூன்று கெட்டப்பில் நடிகர் சந்தானம் இருப்பதும், பின்னாடி டைம் மெஷின் இருப்பதும் அதனை உறுதி செய்தது.

முழு நிர்வாணமாக

இந்நிலையில், தற்போது அமீர்கானின் பிகே படத்தை போல ஆடையின்றி முழு நிர்வாணமாக அந்த இடத்தை மட்டும் தோசைக் கல்லை வைத்து மறைத்தபடி சந்தானம் நிற்கும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. மேலும், மொட்டை ராஜேந்தர், ஆனந்த் ராஜ், முனிஷ்காந்த், இட் இஸ் பிரசாந்த் உள்ளிட்டோர் சந்தானத்தின் பின்னாடி நிற்பது போல போஸ்டர் அமைந்திருக்கிறது.

முற்றும் துறந்த ஞானி

முற்றும் துறந்த ஞானி

இப்படி ஆடை ஏதும் அணியாமல் நிர்வாணமாக நிற்கும் சந்தானத்தை பார்த்த ரசிகர்கள் பாராட்டியும், கலாய்த்தும் கமெண்ட்டுகளை தெறிக்க விட்டு வருகின்றனர். படம் ஓடுவதற்காக கடைசியில் இப்படி இறங்கிட்டீங்களே சார் என்றும், பின்னாடி இருக்கிறவங்க முழுசா பார்த்துட்டாங்களா, முற்றும் துறந்த ஞானி என்றும் சந்தானத்தையே கலாய்த்து வருகின்றனர்.

அய்யோ நீங்களா

அய்யோ நீங்களா

சந்தானத்திற்கு பின் நின்று அவரது பின்னழகை கண்டு ரசிக்கிறாரா? அதிர்ச்சி அடைகிறாரா என்ன செய்கிறார் என்றே தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் சினிமா விமர்சகர் இட் இஸ் பிரசாந்த் இந்த படத்தில் நடித்துள்ள நிலையில், ரசிகர்கள் அவருக்கு மீம் போட்டு பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

இப்படியொரு படம் பண்ணுங்க

இப்படியொரு படம் பண்ணுங்க

டிக்கிலோனா படத்தின் முதல் லுக் நேற்று வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படு கவர்ச்சியாக வெளியாகி இருக்கும் செகண்ட் லுக் போஸ்டருக்கு பாராட்டுக்களும், டிரோல்களும் குவிந்து வருகின்றன. இந்த நெட்டிசன், சிவா மனசுல சக்தி படத்தில் வரும் காமெடி சீனை போட்டு, "நேப்பாளி நிக்கின்னு ஒரு படம் பண்ணுங்க" என கலாய்த்துள்ளார்.

அதுக்குள்ளயா

அதுக்குள்ளயா

சசிகுமாரின் நாடோடிகள் படத்தில் வருவது போல, செகண்ட் லுக் போஸ்டர் வெளியான அடுத்த நொடி, அதனை நடு ரோட்டில் மிகப்பெரிய பிளெக்ஸ் பேனராக வைத்தது போல போட்டோஷாப் செய்து சந்தானம் ரசிகர்கள் அலப்பறை செய்து வருகின்றனர். சினிமாவில் பலரை கலாய்த்து வந்த அவரை இப்படி வச்சு செய்றாங்களே!

அப்போ அடுத்த லுக்

அப்போ அடுத்த லுக்

முதல் லுக்கில் மூன்று சந்தானமும், இரண்டாவது லுக்கில் முற்றும் துறந்த சந்தானமுமாக போஸ் கொடுத்துள்ளார். நாளை ரிலீசாகப் போகும் மூன்றாவது லுக்கில் எதை காட்டப் போறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இப்போதே எழுந்து இருக்கிறது. ஹர்பஜன் சிங், ஹீரோயின்கள், யோகி பாபு இடம்பெறுவார்களா? என்பதை இப்போதே பார்க்க நம்ம கிட்ட டைம் மெஷின் இல்லையே.. சரி வெயிட் பண்ணுவோம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X