DD Next Level: ஜெட் வேகத்தில் சந்தானம்.. டிடி நெஸ்க்ட் லெவல் சூட்டிங் ஓவர்.. ரிலீஸ் தேதி இதுவா?

சென்னை: நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் படம் டிடி நெக்ஸ்ட் லெவல். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றது. படத்தின் படப்பிடிப்புப் பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. இது சந்தானம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சந்தானம் தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல், தென்னிந்திய சினிமாவிலும் மிகவும் முக்கியமான நடிகராக உள்ளார். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த இவர் இன்றைக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் அங்கீகாரத்தினைப் பெற்றுள்ளார். பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடியனாக நடித்த சந்தானம், ஒரு கட்டத்திற்கு மேல் கதாநாயகனாக நடிக்க முடிவெடுத்தார். அப்படி கதாநாயகனாக நடித்து வெளியான படங்கள் செம ஹிட்டும் அடுத்துள்ளது. இப்படியான நிலையில் இவரது நடிப்பில் வெளியான படங்களில் ஒரு சீரிஸாக அவரே நடித்து வெளியிட்டு வரும் படம், தில்லு துட்டு. இந்தப் படத்தின் வரிசையில் அடுத்து உருவாகியுள்ள படம் டிடி நெக்ஸ்ட் லெவல். இந்தப் படத்தின் போஸ்டர் சந்தானத்தின் பிறந்த நாளுக்கு ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், தற்போது படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்ததாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

santhanam dd next level santhanam movies

விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமடைந்த சந்தானத்தை மன்மதன் படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திவைத்தார் சிம்பு. இது மட்டும் இல்லாமல் அடுத்து சில படங்களிலும் சந்தானத்திற்கு வாய்ப்புகளைத் தேடிக் கொடுத்துள்ளார் சிம்பு. அதன் பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வெற்றிகரமான காமெடியனாக வலம் வந்தார். பல படங்களில் வெற்றிக்கு இவர்தான் காரணமாக இருந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இன்றைக்கும் சந்தானம் காமெடியனாக நடித்த படங்களைத் தொலைக்காட்சியில் பார்க்கும் ரசிகர்கள், சந்தானம் மீண்டும் காமெடியனாக நடித்தால் சிறப்பாக இருக்கும் எனக் கூறாமல் இல்லை.

santhanam dd next level santhanam movies

சந்தானம்: இந்த ஆண்டு பொங்கலுக்கு கூட சந்தானம் காமெடியனாக நடித்து, 12 ஆண்டுகளுக்கு முன்னர் ரிலீஸ் ஆகவேண்டி இருந்த, மத கஜ ராஜா படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகி பெரும் வெற்றி பெற்றது. படம் பார்த்த ரசிகர்கள், சந்தானத்தை காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கச் சொல்லி வேண்டுகோள் வைத்தனர். ஆனால், சந்தானம் இதற்கு இதுவரை பதில் எதுவும் கூறவில்லை. மேலும் தனது படங்களில் பிசியாக உள்ளார். ஆனால் அவர் ஏற்கனவே, சிம்பு மற்றும் ஆர்யாவின் படங்களில் காமெடியனாக நடிக்க தான் எப்போதும் தயார் எனத் தெரிவித்திருந்தார்.

டிடி நெக்ஸ்ட் லெவல் : இந்தப் படத்தில், கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன், யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். ஆர்யா தயாரிக்கும் இந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு நல்ல எதிர்ப்பார்ப்பு உள்ளது. . படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில், சந்தானம் ஷோபாவில் அமர்ந்து கொண்டு, வலது கையில் எலும்பைப் பிடித்துக் கொண்டும், தனது இடது காலை ஒரு எலும்புக் கூட்டின் தலையின் மீதும் வைத்துக் கொண்டும் உள்ளார். படம் மே மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

santhanam dd next level santhanam movies

சம்மர் ரிலீஸ்: ஹாரர் கலந்த காமெடி படம் என்பதால், குழந்தைகளுக்கு, ஃபேமிலி ஆடியன்ஸுக்கு இந்தப் படம் மிகவும் பிடிக்கும் என்பதால் மே மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்தால் படத்தின் வசூலில் நல்ல தாக்கத்தினை இந்தப் படம் ஏற்படுத்தும் என படக்குழு நம்புகின்றது. இப்படியான நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இது தொடர்பாக கேக் வெட்டி படக்குழுவினர், அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X