»   »  ஒரே மேடையில் சிம்பு, தனுஷ், சந்தானம் - நடக்குமா இந்த மேஜிக்?

ஒரே மேடையில் சிம்பு, தனுஷ், சந்தானம் - நடக்குமா இந்த மேஜிக்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சந்தானம் ஹீரோவாக நடித்த படங்கள் ரெடியாகி ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. நான்கைந்து படங்கள் இப்படி ரிலீசுக்கு காத்திருந்தால் நம்ம நிலைமை அவ்வளவுதான் என்பதை உணராதவரா சந்தானம்... தான் நடித்து காத்திருக்கும் சக்க போடு போடு ராஜா படத்தை உடனே ரிலீஸ் பண்ண திட்டமிட்டிருக்கிறார். அதுவும் சிவகார்த்திகேயன் நடித்து மெகா பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் வேலைக்காரன் படத்துடன்...

ஏற்கனவே சிவகார்த்திகேயனுக்கும் சந்தானத்துக்கும் ஆகாது என்று புகைந்து வரும் வதந்திகள் மீது எண்ணெய் ஊற்றி இருக்கிறது இந்த அறிவிப்பு. இந்த படத்திற்கு இசையமைத்திருப்பது சிம்பு. எனவே அவர் நிச்சயம் இந்த ஆடியோ விழாவில் கலந்துகொள்வார். தனுஷையும் அழைத்திருக்கிறார்கள். அவரும் வருவதாக சொல்லி விட்டாராம்.

Santhanam, Dhanush and Simbu to share same stage

சிம்பு, தனுஷ், சந்தானம் என மூவரும் ஒரே மேடையில் தோன்றும் அந்த நிகழ்வு வரும் 5 ஆம் தேதி நிகழவிருக்கிறது. மூவரோடு சேர்த்து விஷாலையும் மேடையேற்றலாம் என எண்ணுகிறாராம் சந்தானம். ஆனால் ஆர்கே நகர் தேர்தலில் விஷால் பிஸியானால் மேடையேறுதல் சிரமமாக இருக்கும்.

எது எப்படியோ இந்த புது கூட்டணியைப் பார்த்து மெர்சலாகும் நிலைமையிலா இருக்கிறார் சிவகார்த்திகேயன்!

English summary
Santhanam is planning to stage Danush and Simbu for his Sakkapodu Podu Raja film music event.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil