ஆர்யாவை ஹீரோவாக வைத்து புதிய படம்.... இயக்குனர் அவதாரம் எடுக்கும் சந்தானம்!

சந்தானம் நடித்துள்ள தில்லுக்கு துட்டு 2 பிப்ரவதி 7ம் தேதி வெளியாகிறது.

Recommended Video

இயக்குனராக அவதாரம் எடுக்கும் சந்தானம்- வீடியோ

சென்னை: ஆர்யாவை ஹீரோவாக வைத்து படம் இயக்கப் போவதாக நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக திகழ்ந்தவர் நடிகர் சந்தானம். ஒரு கட்டத்தில் அவர் இல்லாத படங்களே இல்லை என்ற நிலை இருந்தது.

Santhanam to direct Arya

இந்நிலையில், நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என முடிவு செய்து, கண்ணா லட்டு தின்ன ஆசையா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு ஆகிய படங்களில் நடித்தார்.

இந்த படங்கள் எல்லாம் வெற்றி பெற்ற நிலையில், அவர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான சக்கப்போடு போடு ராஜா படம் சரியாக ஓடவில்லை. இதையடுத்து அவர் துல்லுக்கு துட்டு 2 படத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் வரும் 7ம் தேதி வெளியாகிறது. இதையொட்டி படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சந்தானம், ஆர்யாவை வைத்து படம் இயக்கப் போவதாகக் கூறினார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது, "காமெடியனாக இருந்து ஹீரோவாக நடிக்க ஆரம்பித்துவிட்டேன். மீண்டும் காமெடியனாக நடிக்கும் எண்ணம் இல்லை.

ஒருவேளை ஹீரோவாக நடிப்பது ஒர்க்கவுட் ஆகவில்லை என்றால், படம் இயக்க தொடங்கிவிடுவேன். அதுவும் ஆர்யாவை வைத்து தான் படம் இயக்குவேன். அது காமெடி படமா இல்லை வேறுவகை படமா என்பதை இப்போது சொல்ல முடியாது.

தில்லுக்கு துட்டு 2 படம் முதல் பாகத்தை போலவே செம காமெடியாக இருக்கும். நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் படம் இருக்கும்" என அவர் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X