சைடு கேப்பில் டிரெண்ட் செய்யும் சந்தானம் ரசிகர்கள்.. வேற மாறி கொண்டாட்டம் #1YearsOfKalakkalHitA1

சென்னை: சந்தானத்தின் ஏ1 படம் வெளியாகி இன்றுடன் ஓராண்டு ஆவதை அவரது ரசிகர்கள் ட்விட்டரில் ஹாஷ்டேக் உருவாக்கி தெறிக்கவிட்டு வருகின்றனர்.

சர்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவான இந்த படத்தை 18 ரீல்ஸ் வெளியிட்டது.

நாளைய இயக்குநர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இயக்குநர் ஜான்சன் கே இயக்கிய இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி நடித்து இருந்தார்.

ஓராண்டு

ஓராண்டு

சந்தானத்தின் கலக்கல் காமெடி படமான ஏ1 வெளியாகி இன்றுடன் ஓராண்டு ஆகிறது. கடந்த 2019 ஜூலை 26ம் தேதி இந்த படம் தியேட்டர்களில் வெளியானது. சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் இன்னமும் பல மியூசிக் சேனலில் ரசிகர்களின் ஃபேவரைட் பாடலாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

மஸ்த்ராம் ஹீரோயின்

மஸ்த்ராம் ஹீரோயின்

மஸ்த்ராம் படம் மற்றும் வெப்சீரிஸ்களில் நடித்து பிரபலமான பாலிவுட் நடிகை தாரா அலிஷா பெர்ரி இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அய்யர் ஆத்து மாமியாக நடித்து அசத்தி இருப்பார். செம ஸ்லிம்மாக முகத்தில் எப்போதும் சின்ன புன்னகையுடன் இருக்கும் இவர் சந்தானத்திற்கு செம மேட்சாக இருந்தார் என படத்தை பார்த்த ரசிகர்கள் கொண்டாடினர்.

தெறிக்கவிடும் ரசிகர்கள்

தெறிக்கவிடும் ரசிகர்கள்

காமெடியனாக இருந்து ஹீரோவாக தனது விடாமுயற்சியால் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் சந்தானத்துக்கு கடந்த ஆண்டு இந்த படம் பட்ஜெட்டை விட இரு மடங்கு வசூலை ஈட்டி தந்து சாதனை படமாக அமைந்தது. சிட்டுக்கு சிட்டு பாடல், மாலை நேர பாடல் எல்லாம் ரசிகர்களின் ஹிட் லிஸ்டில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்து

அடுத்தடுத்து

காமெடி சயின்ஸ் ஃபிக்‌ஷன் திரைப்படமாக வரும் டிக்கிலோனா, ராஜசிம்மாவாக சந்தானம் அதிரவைக்கவுள்ள பிஸ்கோத், ரிலீசுக்காக காத்திருக்கும் சர்வர் சுந்தரம் உள்ளிட்ட பல சந்தானம் படங்கள், இந்த லாக்டவுன் முடிவுக்காக காத்திருக்கின்றன. ரசிகர்களை எப்போதுமே சிரிக்க வைத்து வரும் சந்தானம் விரைவில் தனது லட்சியத்தையும் அடைவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X