For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமந்தாவுக்கு 'லவ்' டார்ச்சர் கொடுக்கும் சந்தானம்!

By Siva
|

தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவிருக்கும் ஈகா படத்தில் நகைச்சுவை நடிகர் சந்தானம் நாயகி சமந்தாவுக்கு காதல் இம்சை கொடுக்கிறாராம்.

தெலுங்கு ஹீரோ நானி, சமந்தா ஜோடியாக நடிக்கும் படம் ஈகா. இதில் கன்னட நடிகர் சுதீப் வில்லனாக வருகிறார். நம்ம நகைச்சுவை நடிகர் சந்தானம் புதுவிதமான காமெடி செய்து கலக்குகிறார். நானியும், சமந்தாவும் காதலர்கள். இந்நிலையில் சமந்தா மீது ஒரு தலையாக காதல் கொள்ளும் வில்லன் சுதீப் நாயகனைத் தீர்த்துக் கட்டுகிறார். மறுபிறவியில் நாயகன் ஈயாகப் பிறந்து வில்லனை பழிவாங்குகிறார். இது தான் ஈகாவின் கதை.

இந்த படத்தில் சந்தானமும் தன் பங்குக்கு சமந்தாவுக்கு காதல் தொல்லை கொடுத்து ரசிகர்களை சிரிக்க வைக்கிறாராம். படத்தின்படி 32 வயதாகியும் திருமணமாகாத சந்தானம் சமந்தாவை தனது காதல் வலையில் விழ வைக்க முயற்சிக்கிறார்.

ராஜமௌலி இயக்கும் இநத படத்தின் பட்ஜெட் ரூ.22 கோடியைத் தொடும் என்கின்றனர். இதில் சிறப்பு எபெக்ட்களுக்கு மட்டுமே ரூ. 5 கோடி செலவாம். இந்த படத்தை ரூ.2 கோடியில் எடுக்க நினைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் 5ம் தேதி ரிலீஸாகும் என்று கூறப்படுகின்றது.

English summary
Comedian Santhanam is giving kadhal imsai to Samantha in the upcoming tamil cum Telugu flick Eega. Telugu actor Naani is the hero while Kannada actor Sudeep is the bad boy.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more