சந்தானத்தின் புதிய படம்.. தந்தை - மகன் உணர்வுப்பூர்வமான கதை !

சென்னை : நடிகர் சந்தானம் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தில் அவருக்குத் தந்தையாக எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கிறார்.

ஆர்.கே.என்டெர்டெய்ன்மென்ட் சி.ரமேஷ்குமார் தயாரிப்பில், ஆர்.ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படம் பல பாசபோராட்டம் நிறைந்த கதையாகும்.

ஷாயாஜி ஷிண்டே, வம்சி கிருஷ்ணன், லொள்ளு சபா ஸ்வாமிநாதன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். முதன்முறையாக சந்தானம் படத்தில் சாம் சி.எஸ். இசையமைக்க உள்ளார். இத்திரைப்படத்தை மாதவன் எடிட்டிட் செய்கிறார்.

கும்பகோணத்தில் படப்பிடிப்பு

கும்பகோணத்தில் படப்பிடிப்பு

நடிகர் சந்தானம் 'பேரிஸ் ஜெயராஜ்' என்ற படத்தில் நடித்து முடித்த கையோடு இப்படத்தில் நடிக்க உள்ளார். இப்புதிய படத்திற்கான படப்பிடிப்பு கும்பகோணத்தில் தொடங்க உள்ளது. திருச்சி, ஸ்ரீரங்கம், சென்னை உள்ளிட்டப் பகுதிகளிலும் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குனர்

அறிமுக இயக்குனர்

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் அறிமுக இயக்குநராக இணைந்துள்ளார் ஸ்ரீனிவாச ராவ். இவர், 'வல்லினம்' படத்தின் இயக்குநர் அறிவழகனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர். இவர் நிறைய விளம்பரப்படங்களையும் இயக்கியிருக்கிறார்.

உணர்வுப்பூர்வமான கதை

உணர்வுப்பூர்வமான கதை

இப்படத்தைப் பற்றி ஸ்ரீனிவாச ராவ் கூறுகையில், "இந்தத் திரைக்களம் சந்தானத்துக்கு மிகவும் பொருந்தியுள்ளது. காமெடி கதைக்களம் என்றாலும் கூட தந்தை - மகன் இடையே நடைபெறும் காட்சிகள் படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு தந்தை - மகனையும் உணர்வுப்பூர்வமாக பிணைத்துவைக்கும்.

அனைவரும் விரும்பும்படி

அனைவரும் விரும்பும்படி

ஒரு தந்தைக்கும் - மகனுக்கும் இடையே நடந்த சம்பவங்களையும், அவர்கள் கடந்துவந்த உணர்வுப் போராட்டங்களையும் இப்படம் பிரதிபலிக்கும் என்பதால் படத்தைக் காண்போர் தங்களுடைய வாழ்க்கை நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு ஒன்றிப்போக முடியும். மேலும், அனைத்துத் தரப்பு மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஜனரஞ்சகமான கதையாக உருவாக்கப்பட்டுள்ளதால் ஏ, பி, சி என எல்லா சென்டர்களிலும் படம் நல்ல வரவேற்பைப் பெறுமென்பதில் ஐயமில்லை.

பாராட்டை பெறுவார்

பாராட்டை பெறுவார்

காமெடி, உணர்வுப்பூர்வமான காட்சிகள் மட்டுமல்லாமல் இதுவரை ஏற்றிராத புதிய வேடத்தில் மற்றொரு அழகிய பரிணாமத்தில் நடிக்கிறார்.இது அனைவரின் புருவத்தையும் உயர்த்தி பாராட்டு பெறும் மற்றும் இன்றைய அரசியல் அமைப்பை வெளிப்படுத்தும் வகையில் பல சுவாரஸ்யமான , ஜனரஞ்சகமான காட்சிகளுடன் இப்படம் உருவாக்கப்படுகிறது.

அறிமுகம்

அறிமுகம்

ஹீரோயினாக புதுமுகத்தை அறிமுகம் செய்கிறோம். மேலும், படத்ததை பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது. கும்பகோணத்தைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம், திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளிலும் படப்பிடிப்பு நடைபெறும். அரசாங்கம் வழிகாட்டுதலின்படி கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றியே படப்பிடிப்பு நடைபெறுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X