For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  திரும்பவும் பழைய ரூட்டுக்கே போய்டலாமா? ரூம் போட்டு யோசிக்கும் சந்தானம்: இதுக்காக தான் அந்த முடிவா?

  |

  சென்னை: விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான 'லொள்ளு சபா' என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் சந்தானம்.

  Recommended Video

  GuluGulu Movie Review | Yessa ? Bussa ?| GuluGulu | Santhanam |*Review

  முன்னணி ஹீரோக்களுடன் காமெடியனாக கலக்கிவந்த சந்தானம், கடந்த சில வருடங்களாக ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார்.

  சந்தானம் ஹீரோவாக நடிக்கும் படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்து வருவதால், அவர் முக்கியமான முடிவு எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

  புஷ்பராஜ் இஸ் கம்பேக்… புஷ்பா இரண்டாம் பாகம் மெகா அப்டே: அல்லு அர்ஜுன் ரசிகர்கள் கொண்டாட்டம் புஷ்பராஜ் இஸ் கம்பேக்… புஷ்பா இரண்டாம் பாகம் மெகா அப்டே: அல்லு அர்ஜுன் ரசிகர்கள் கொண்டாட்டம்

  சிம்பு கொடுத்த அறிமுகம்

  சிம்பு கொடுத்த அறிமுகம்

  விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான லொள்ளுசபா நிகழ்ச்சி, மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்தது, நடிகர் சந்தானத்தின் நக்கலும் நையாண்டியும் தான். 'லொள்ளு சபா' நிகழ்ச்சி கொடுத்த சிறப்பான அடையாளம், அவரை சிம்பு மூலம் சினிமாவுக்கும் அழைத்து வந்தது, குறுகிய காலத்திலேயே சிம்புவும் சந்தானமும் நெருங்கிய நண்பர்களாகினர்.

  கவுண்டமணியின் ரீ வெர்ஷன்

  கவுண்டமணியின் ரீ வெர்ஷன்

  சந்தானத்தின் காமெடிகள் அனைத்தும், நக்கல் மன்னன் கவுண்டமணியின் சாயலுடன் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனாலும், இதுபோன்ற விமர்சனங்களை கண்டுகொள்ளாத சந்தானம், அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் ஒரு ரவுண்டு வரத் தொடங்கினார். சூப்பர் ஸ்டார் ரஜினி உட்பட, விஜய், அஜித், சூர்யா, விஷால், கார்த்தி, தனுஷ் என அனைவரது படங்களிலும் சந்தானத்தை தாரளமாகப் பார்க்கலாம்.

  காமெடியில் அதிரி புதிரி ஹிட்

  காமெடியில் அதிரி புதிரி ஹிட்

  மிக முக்கியமாக சந்தானத்தின் காமெடியில், 'சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்கள் அதிரிபுதிரியாக ஹிட் அடித்தன. இதுபோல் தொடர்ச்சியாக பல படங்கள், சந்தானத்தின் காமெடிக்காக கொண்டாடப்பட்டன. வடிவேலுவும் சில ஆண்டுகள் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்ததால், சந்தானத்தின் மார்கெட்டில் அடை மழை அடித்தது.

  ஆசை யாரை விட்டுச்சு

  ஆசை யாரை விட்டுச்சு

  காமெடியில் அசத்திய சந்தானம், திடீரென ஹீரோவாக நடிக்க முடிவெடுத்தார். அப்படி அவர் ஹீரோவாக அறிமுகமான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து கண்ணா லட்டு திண்ண ஆசையா, தில்லுக்கு துட்டு, சக்கபோடுபோடு ராஜா போன்ற படங்களில் காமெடியுடன் கொஞ்சம் ஆக்சனையும் சேர்த்துக் கொண்டு களமிறங்கினார். டைமிங்கில் பஞ்ச் அடித்து ரசிகர்களின் வயிற்றை பதம் பார்த்த சந்தானம், ஆக்சனில் ஜொலிக்க முடியாமல் தடுமாறினார்.

  ஏமாற்றியதா குலுகுலு?

  ஏமாற்றியதா குலுகுலு?

  சந்தானத்தை காமெடியனாக அங்கீகரித்த ரசிகர்கள், அவரை ஹீரோவாக ஏற்றுக்கொள்ளவில்லை என சொல்லப்படுகிறது. இதனால்,அவர் ஹீரோவாக நடித்த திரைப்படங்கள் பெரிய தோல்வியைத் தழுவியதாக, பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரங்கள் கூறின. இதனிடையே, சந்தானம் நடிப்பில் கடந்த மாதம் வெளியான 'குலுகுலு' படமும், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என சொல்லப்படுகிறது. இந்தப் படத்தை 'விக்ரம்' கதாசிரியர் ரத்னகுமார் இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  காத்திருக்கும் கடைசி வாய்ப்பு

  காத்திருக்கும் கடைசி வாய்ப்பு

  சந்தானம் தற்போது ஏஜென்ட் கண்ணாயிரம், சர்வர் சுந்தரம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிக்கவுள்ள புதிய படத்தில், 5 கெட்டப்களில் நடிப்பதாகவும், இப்படத்தை இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்த கோவர்தன் இயக்கவுள்ளதாகவும் அப்டேட் வெளியாகியுள்ளது. பேண்டசியான காமெடி ஜானரில் உருவாகும் இப்படம், சந்தானத்திற்கு கை கொடுக்குமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

  மீண்டும் காமெடிக்கே திரும்ப முடிவு?

  மீண்டும் காமெடிக்கே திரும்ப முடிவு?

  5 கெட்டப்களில் நடிக்கவுள்ள புதிய படத்தில், சந்தானம் பாஸ் ஆவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர். அதேநேரம், ஹீரோவாக நடிக்கும் படங்கள் தொடர்ந்து ப்ளாப் ஆகிவருவதால், மீண்டும் காமெடி கேரக்டரளில் மட்டும் நடிக்கலாமா என சந்தானம் யோசித்து வருவதாக சொல்லப்படுகிறது. இதற்காக அவர் சில முன்னணி ஹீரோக்களுக்கு தூதுவிடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

  English summary
  Santhanam has decided to act only in comedy roles again?
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X