ஒரே தேதியில் இரண்டு இழப்புகள்.. சந்தானத்துக்கு உச்சக்கட்ட வேதனை.. ரசிகர்கள் ஆறுதல்

சென்னை: நடிகர் சந்தானம் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வலம் வந்தார். ஒருகட்டத்தில் ஹீரோவாக அறிமுகமான அவர் தொடர்ந்து ஹீரோவாக நடித்துவருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக வடக்குப்பட்டி ராமசாமி படம் வெளியானது. படத்துக்கு ரசிகர்கள் தங்களது டீசண்ட்டான வரவேற்பை கொடுத்திருக்கின்றனர். இதனால் சந்தானம் மகிழ்ச்சியில் இருந்தார். ஆனால் அவரது டீமில் இருக்கும் சேஷு உயிரிழந்தது சந்தானத்தை உச்சக்கட்ட சோகத்தில் தள்ளியிருக்கிறது.

சந்தானம் கோலிவுட்டில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர். அவரது டைமிங்கும், கவுண்ட்டர்களும் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டன. கவுண்டமணி ஃபார்முலாவை சந்தானம் ஃபாலோ செய்தாலும் அதில் தனக்கென தனி பாணியை பின்பற்றினார். இதன் காரணமாக வடிவேலு எப்படி பீக்கில் இருந்தபோது அவர் இல்லாமல் ஒரு படமும் வெளியாகவில்லையோ அதேபோல் சந்தானம் பீக்கில் இருந்தபோதும் நிலைமை இருந்தது. அதேசமயம் சந்தானம் அடிக்கும் கவுண்ட்டர்கள் சமயத்தில் சர்ச்சைகளையும் சம்பாத்திருக்கின்றன.

Santhanam has lost two of his friends on the same date

ஹீரோ சந்தானம்: நிலைமை இப்படி இருக்க திடீரென அவருக்கு ஹீரோ ஆசை வந்துவிட்டது. அதனையடுத்து வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. தொடர்ந்து சபாபதி, ஏ1, டிக்கிலோனா என பல படங்களில் வரிசையாக ஹீரோ வேடம் ஏற்றார். ஆனால் எந்தப் படமும் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இந்தச் சூழலில் அண்மையில் வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் படம் அவருக்கு ஓரளவு வெற்றியை கொடுத்தது.


வடக்குப்பட்டி ராமசாமி: டிடி ரிட்டர்ன்ஸ் படத்துக்கு பிறகு கிக் படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படம் சரியாக போகவில்லை. இப்படிப்பட்ட சூழலில் தற்போது அவர் வடக்குப்பட்டி ராமசாமி என்ற படத்தில் நடித்திருக்கிறார். அதனையொட்டி படத்திலிருந்து சில நொடிகள் ஓடக்கூடிய க்ளிம்ப்ஸ் காட்சி ஒன்று வெளியானது. அதில் சந்தானத்தை பார்த்து ஒருவர், கடவுள் இல்லைனு சொல்லிட்டு ஊருக்குள்ள ஒருத்தர் சுத்துனாரே அந்த ராமசாமியா நீ என்று கேட்கும்படி இருந்தது. அது சர்ச்சையை ஏற்படுத்தியது.

டீசண்ட் வரவேற்பு: படமானது சமீபத்தில் வெளியானது. படத்துக்கு ரசிகர்கள் தங்களது டீசண்ட்டான வரவேற்பை கொடுத்திருக்கின்றனர். மேலும் சந்தானத்துக்கு இந்தப் படம் ஹிட் வரிசையில் இணைந்துவிட்டதாகவும் அவரது ரசிகர்கள் கூறுகின்றனர். படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்ததால் சந்தானம் ஹேப்பி மோடில் இருக்கிறார். அடுத்தடுத்த படங்களையும் வெற்றி படங்களாக கொடுக்கும் முனைப்பிலும் இருக்கிறார்.

சேஷு: வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் சேஷுவின் நடிப்பும் அபாரமாக இருந்தது. கோயில் பூசாரியாக அவர் தனது நடிப்பை சிறப்பாக காண்பித்திருந்தார். இந்தச் சூழலில் அவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

சந்தானம்: முக்கியமாக சந்தானத்தை உச்சக்கட்ட சோகத்தில் தள்ளியிருக்கிறது. லொள்ளு சபாவிலிருந்து சேஷுவும் சந்தானமும் நண்பர்கள் ஆவர். இப்போதுதான் சந்தானத்தின் வாழ்க்கை ஆரம்பித்ததாக கருதப்பட்டது. அதேபோல் சந்தானத்தின் நெருங்கிய நண்பரும், மருத்துவரும், நடிகருமான சேதுராமனும் உடல்நலக்குறைவால் மார்ச் 26ஆம் தேதி 2020ஆம் ஆண்டு உயிரிழந்தார். இப்போது அதே தேதியில் சேஷுவும் உயிரிழந்திருக்கிறார். ஒரே தேதியில் தனது இரண்டு நண்பர்களை இழந்த சந்தானத்துக்கு பலரும் தங்களது ஆறுதலை கூறிவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X