‘குலு குலு‘ டப்பிங்கை கூலாக தொடங்கினார் சந்தானம்…வைரலாகும் புகைப்படம் !
சென்னை : நடிகர் சந்தானம் ஹீரோவாக நடிக்கும் குலு குலு திரைப்படத்தின் டப்பிங் பணியை இன்று தொடங்கினார்.
இப்படத்தில் நடிகர் சந்தானம் உலகம் சுற்றும் வாலிபனாக நடித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சந்தானம் தற்போது ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது.

மேயாதமான்
மேயாதமான் படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் ரத்ன குமார். இவர் வைபவ், பிரியா பவானி சங்கர், இந்துஜா நடிப்பில் வெளியான மேயாதமான் படத்தை இயக்கி இருந்தார்.இத்திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் ஹிட் ஆனது.

பாராட்டை பெற்ற ஆடை
இந்த திரைப்படத்தை அடுத்து அமலா பாலை வைத்து ஆடை படத்தை இயக்கினார். ஒரு வித்தியாசமான கதைக்களத்தில் உருவான இத்திரைப்படத்தில் அமலாபால் நிர்வாணமாக நடித்து பரபரப்பை கிளப்பினார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்ற போதிலும் இந்த திரைப்படத்திற்கு பிறகு அமலா பாலுக்கு பெரிதாக எந்த படமும் இல்லை. அதோ அந்த பறவைப்போல படத்தை அவர் பெரிதும் எதிர்பார்த்து இருக்கிறார்.

வசனகர்த்தாவாக
இதையடுத்து, ரத்னகுமார் மாஸ்டர் திரைப்படத்திற்கு வசனகர்த்தாவாக இருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதே போல, கமல், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்திற்கு இவரே டையலாக் ரைட்டராக உள்ளார்.

குலுகுலு
தற்போது ரத்னகுமார் சந்தானத்தை ஹீரோவாக வைத்து குலு குலு என்கிற படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் நடிகர் சந்தானம் உலகம் சுற்றும் வாலிபனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது . இப்படத்தின் பர்ஸ்ட் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பலரின் பாராட்டை பெற்றது. அதில் ,சந்தானம் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கிறார்.

டப்பிங் தொடங்கியது
இந்நிலையில், குலு குலு திரைப்படத்தின் டப்பிங்கை இன்று முதல் தொடங்கி உள்ளதாக ரத்னகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்படத்தில் சந்தானம், அதுல்யா சந்திரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, லொள்ளு சபா மாறன், லொள்ளு சபா சேசு, டிஎஸ்ஆர் பிபின், கவி ஆகியோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ராஜ் நாராயணன் தயாரித்துள்ளார். இப்படமும் சந்தானத்தின் மற்ற படங்களைப்போல நக்கல் நய்யாண்டியுடன் மாஸாக இருக்கும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











