Santhanam Salary: அடுத்தடுத்து ஃபிளாப்.. ஆனாலும், சம்பளத்தை குறைக்காத சந்தானம்.. இத்தனை கோடியா?

சென்னை: ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் வெளியான அறை எண் 305-ல் கடவுள் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார் சந்தானம். அதுவரை காமெடியனாக நடித்து வந்தவர், அந்த படத்திற்கு பிறகும் சில படங்களில் காமெடியனாக நடித்தார். 2013-ல் வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தில் மீண்டும் லீடு ரோலில் நடிக்க ஆரம்பித்த அவர், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, சக்கப்போடு போடு ராஜா, தில்லுக்கு துட்டு 2 என வரிசையாக பல படங்களில் நடித்து வந்தார்.

இதில், சந்தானத்துக்கு தில்லுக்கு துட்டு படங்கள் அதிக லாபத்தை கொடுத்து வந்தன. அந்த வரிசையில், கடந்த ஆண்டு டிடி ரிட்டர்ன்ஸ் எனும் படத்தில் நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றார். ஆனால், அதன் பிறகு வெளியான கிக் மற்றும் 80ஸ் பில்டப் படங்கள் படுதோல்வியை சந்தித்தன. அடுத்து வரும் பிப்ரவரி 2-ஆம் தேதி வடக்குப்பட்டி ராமசாமி படத்தை ரிலீஸ் செய்ய தயாராகியுள்ளார்.

Santhanam hikes his salary after gives back to back flops?

வடக்குப்பட்டி ராமசாமி டிக்கெட் புக்கிங் ஆரம்பம்: 2021 ஆம் ஆண்டு கார்த்திக் யோகி இயக்கத்தில் வெளியான டிக்கிலோனா திரைப்படம் டைம் மெஷின் கான்செப்ட் உடன் வெளியாகி சந்தானத்துக்கு நல்ல வெற்றி படமாக அமைந்தது. இந்நிலையில் மீண்டும் அதே கார்த்திக் யோகி உடன் இணைந்து சந்தானம் நடித்துள்ள படம்தான் வடக்குப்பட்டி ராமசாமி. வரும் பிப்ரவரி 2-ம் தேதி வெளியாக உள்ள அந்தப் படத்திற்கான டிக்கெட் புக்கிங் இன்று முதல் ஆரம்பித்துள்ளது. சந்தானத்துக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மற்றும் வழக்கமாக சந்தானம் படத்தில் இடம்பெறும் லொள்ளுசபா டீம் உள்ளிட்ட பலர் இந்தப் படத்திலும் நடித்துள்ளனர்.

டிடி ரிட்டர்ன்ஸ் 2: அடுத்த சந்தானம் ஆர்யா தயாரிப்பில் டிடி ரிட்டன்ஸ் 2 படத்தில் நடிக்க உள்ளதாக சமீபத்தில் நடைபெற்ற வடக்குப்பட்டி ராமசாமி இசை வெளியீட்டு விழாவில் அறிவித்தார். ராம் பாலா இயக்கத்தில் தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2 படங்கள் வெளியான நிலையில், டிடி ரிட்டர்ன்ஸ் படத்தை பிரேம் ஆனந்த் என்பவர் இயக்கியிருந்தார். டிடி ரிட்டன்ஸ் 2 படத்தையும் அவர்தான் இயக்கப் போவதாக சந்தானம் அறிவித்து இருந்தார்.

சந்தானம் சம்பளம்: கடந்தாண்டு வெளியான டிடி ரிட்டன்ஸ் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்தடுத்து வெளியான கிக் மற்றும் 80ஸ் பில்டப் உள்ளிட்ட படங்கள் பெரிதாக ஓடவில்லை. ஆனாலும், இன்னும் தனது சம்பளத்தை குறைக்காமல் டிடி ரிட்டர்ன்ஸ் படத்திற்காக 8 கோடி ரூபாய் சம்பளமாக கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் ஆர்யா சுமார் 15 கோடி பட்ஜெட்டில் டிடி ரிட்டர்ன்ஸ் படத்தை தயாரிக்கப் போவதாகவும் சந்தானத்துக்கு 8 கோடி தர தயாராக இருப்பதாகவும் கூறுகின்றனர்.

சந்தானம் ஆர்யா காம்பினேஷன்: வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் இயக்குநர் கார்த்திக் யோகி மறுபடியும் ஒரு படத்தை சந்தானத்தை வைத்து இயக்கப் போவதாகவும் அதில், சந்தானம் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்க உள்ளதாகவும் மேடையிலேயே சந்தானம் அறிவித்து இருந்தார். டிடி ரிட்டர்ன்ஸ் 2 படத்திலும் ஆர்யா கேமியோவாக வருவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X