Don't Miss!
- News லண்டன் தெருவில்.. ரத்தம் சொட்ட சொட்ட பாய்ந்த 2 குதிரைகள்.. பக்கிங்ஹாம் அரண்மனை கிட்ட ஒரே பரபரப்பு
- Automobiles நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
மும்பை மாடல் அழகியை ஜோடியாக்கிய சந்தானம்
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் ஹீரோவாக நடிக்கும் சந்தானத்திற்கு ஜோடியாக மும்பை மாடல் அழகி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெலுங்கில் ராஜமவுலி இயக்கி 2010 ல் வெளியான மரியாதை ராமண்ணா படம்தான் 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' என்று தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது.
தெலுங்கில், காமெடி நடிகர் சுனில் ஹீரோவாகவும், சலோனி ஹீரோயினாகவும் இப்படத்தில் நடித்திருந்தார்கள்.
மும்பை மாடல் அழகி
தமிழில் சந்தானம் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக மும்பை மாடல் அழகி அஸ்னா ஜாவேரி நடிக்க உள்ளார். சந்தானம் ஏற்கனவே அறை எண் 305ல் கடவுள், கண்ணா லட்டு தின்ன ஆசையா படங்களில் ஹீரோவாக நடிக்கிறார்.
சந்தானம் தயாரிப்பு
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தை முதல் பிரதி அடிப்படையில் பி.வி.பி சினிமாஸ் நிறுவனத்திற்கு சந்தானம் தயாரிக்கிறார்.
முதன் முதலாக லட்டு
காமெடியனாக மட்டுமே நடித்துவந்த சந்தானம், முதன் முதலாக நாயகனாக நடித்து தயாரித்த படம் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா'. தற்போது வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தை தயாரிக்கிறார்.
பிரம்மாண்ட செட்
இப்படத்திற்காக பெரிய செட் ஒன்றை சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில் ஈவிபி பொழுதுபோக்கு பூங்காவில் போட்டிருக்கிறார்களாம். விரைவில் அங்கு படப்பிடிப்பு தொடங்குகிறது.
தொடர்ச்சியாக தேதிகள்
தனது தயாரிப்பு நிறுவனம் மூலமே தயாரிக்க இருப்பதால், தொடர்ச்சியாக தேதிகள் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறாராம் சந்தானம்.
காமெடி நடிகர் ஸ்ரீநாத்
உன்னாலே உன்னாலே', 'வேட்டைக்காரன்' போன்ற படங்களில் நடித்த காமெடி நடிகர் ஸ்ரீநாத் இயக்குகிறார். இவர் மறைந்த இயக்குனர் ஜீவாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.