Actor Santhanam: ஹீரோவா சூப்பர் ஹீரோவா.. குழப்பத்தில் சந்தானம்!
சென்னை: நடிகர் சந்தானம் இப்போது பெரும் குழப்பத்தில் இருக்காராம். ஹீரோவாக நடிப்பதைத் தொடரலாமா, இல்லை மீண்டும் நகைச்சுவை நடிகராக நடிக்க ஆரம்பிச்சுடலாமான்னு குழப்பமான்னு நினைக்கறீங்க.
அதுதான் இல்லை...தொடர்ந்து ஹீரோவா நடிக்கலாமா,இல்லை சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட் செலக்ட் பண்ணலாமான்னு பெரும் குழப்பத்தில் இருக்காராம்.
நகைச்சுவையில் சந்தானம் இடம் இன்னு.ம் காலியாகத்தான் இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. இதை ஏனோ சந்தானம் நினைத்து கூட பார்க்கவில்லை.

பணம் சேர்ந்து
சந்தானத்துக்கு நகைச்சுவை நடிகரானதில் நிறைய பணம் சேர்ந்து விட்டது. அதனால்தான் இனியும் ஹீரோக்களுக்கு காமெடியனாக நடிப்பதில் அவருக்கு விருப்பம் இல்லை என்று ஒரு சாரார் சொல்கிறார்கள். இன்னொரு சாரார், தனக்கும் கொஞ்சம் மாற்றம் ஏற்றமெல்லாம் கேரியரில் வேண்டும் என்று முடிவு எடுத்துதான் ஹீரோவாக கள்ம் இறங்கினார் என்று சொல்கிறார்கள்.

தெளிவாக இருந்தவர்
என்னதான் ஹீரோவாக நடித்தாலும் ஆரம்பத்தில் காமெடி ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்துதான் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், தில்லுக்கு துட்டு போன்ற படங்களில் நடித்தார். இது எப்படி வசூலை பார்த்தது, வரவேற்பு கிடைச்சதுன்னு அவருக்கே தெரியும்.இதை கணக்கில் எடுத்துக்காமல் சந்தானம் குழப்பம்
அடைவது எதனால்?

போடு ராஜா
சந்தானம் சூப்பர் ஹீரோவா நடிச்சு வெளிவந்த சக்கை போடு போடு ராஜா படம் அவ்வளவா அவருக்கு கை கொடுக்கலை .காரணம் சூப்பர் ஹீரோ ரேஞ்சில் அவர் கதை தேர்வு செய்து நடிச்சதுதான். அதனால, குழப்பம் அடையாமல் அவர் முதலில் நடித்த படங்கள் மாதிரியே நடிக்கலாம். ஒருநாள் சூப்பர் ஹீரோ வாய்ப்பு தானாகத் தேடி வந்து அவரைத் கை தூக்கி விட்டாலும் விடலாம். என்று அவரை சுற்றி உள்ளவர்கள் அறிவுரை ஆலோசனை சொன்னாலும் குழப்பம் தீராமல் இருக்காராம்.

ஏன் சூப்பர் ஹீரோ?
எல்லா ஹீரோக்களும் சூப்பர் ஹீரோ ஆகணும்னு ஆசைப்படறாங்களே அது ஏன் என்கிற கேள்வி வரும்போது, சூப்பர் ஹீரோன்னா நல்லா ஓடற குதிரை என்று அவர்கள் நடிக்கும் படத்தில் காசைப் போட ரெடியாக இருப்பாங்களாம். விநியோகஸ்தர்கள் தரப்பிலும் பெட்டிக்கு துட்டு அதிகம் கிடைக்கும் என்பதுதானாம்.
என்னதான் இருந்தாலும் சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரும்.. சந்தானம் சட்டியில் கலாய், நகைச்சுவைதான் அதிகம் உள்ளது. அந்த வாசனை அவர் எந்த கதாபாத்திரத்தில் நடிச்சாலும் வீசுதே!


Click it and Unblock the Notifications











