சார்பட்டா 2வில் சந்தானம்?.. ஆர்யா போனில் இருந்து பா. ரஞ்சித் போன் செய்ததும் ஓ.கே சொல்லிட்டாரே!

சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் வேட்டுவம். இந்த படத்திற்கு பிறகு இவரது இயக்கத்தில் உருவாக உள்ள படம் சார்பட்டா பரம்பரை பாகம் 2. ஏற்கனவே சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த ஆர்யா இந்த படத்திலும் கதாநாயகனாக நடிக்கிறார். வேட்டுவம் படத்தில் ஆர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படி இருக்க, ஆர்யா நடிக்க உள்ள சார்பட்டா 2 படத்தில் நடிகர் சந்தானமும் நடிக்க உள்ள என்ற தகவலை கேட்கும் போது உங்களுக்கு எவ்வளவு ஆர்வம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

ஆர்யாவின் மிஸ்டர் எக்ஸ் படத்திற்கான ப்ரோமோஷன் நடைபெற்று வருகிறது அதில் ஒரு அங்கமாக ஆர்யா வி ஜே சிந்து விலாஸ் உடன் இணைந்து நடத்திய மொட்டைமாடி பார்ட்டி வீடியோவில் சந்தானத்தை தொடர்பு கொண்டு சார் பட்டா டூ வில் நடிக்க கேட்டதற்கு அவரும் சரி என்று கூறியுள்ளார் அது தொடர்பாக இந்த தொகுப்பில் பார்க்கலாம். அப்படி நடந்தால் நன்றாகத்தான் இருக்கும், ஆனால் என்ன நடந்தது என்பதைப் பார்க்கலாம் வாங்க.

Santhanam in Sarpatta 2 Actor Says OK to Pa Ranjith During Fun Prank Call from Arya s Phone

ஆர்யா, கௌதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள மிஸ்டர் எக்ஸ் திரைப்படம் ஏப்ரல் 17ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை எஃப் ஐ ஆர் படத்தை இயக்கிய இயக்குனரான மனு ஆனந்த் எழுதி இயக்கி உள்ளார். படத்தில் சரத்குமார், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படம் ஒரு ஸ்பை திரில்லர் படமாக உருவாகியுள்ளது.

ஆர்யா - சந்தானம்: இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக விஜே சித்து விலாக்ஸ் உடன் கௌதம் கார்த்திக் மற்றும் ஆர்யா இணைந்து மொட்டை மாடி பார்ட்டியில் கலந்து கொண்டனர். அப்போது விளையாட்டாக ஆர்யாவின் ஃபோனில் இருந்து சந்தானத்துக்கு போன் செய்தனர். இயக்குனர் பா. ரஞ்சித் போல் பேசினார் விஜே சித்து. அதாவது சார்பட்டா 2 படத்தில் உங்களுக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் இருக்கிறது, அந்த படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா என்று கேட்கிறார். அதற்கு சந்தானமும் கதாபாத்திரம் எப்படிப்பட்டது என்று கூறுங்கள் நான் நடிக்கிறேன் என்று கூறுகிறார்.

Santhanam in Sarpatta 2 Actor Says OK to Pa Ranjith During Fun Prank Call from Arya s Phone

ஆர்வம்: அடுத்ததாக நீங்கள் ஆர்யாவுக்கு பாக்ஸராக பயிற்சி கொடுக்கும் ஒரு நபராக வருகிறீர்கள் என்று கூறுகிறார். மேலும் இதற்காக நீங்கள் உடல் எடையை பாக்ஸர் போல் மாற்ற வேண்டும் என்றும் கூறுகிறார். இது எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சந்தானம் சரி என்று கூறிவிட்டு, எப்பொழுது தேதி வேண்டும் என்று கேட்கிறார். அவருக்கு உடனடியாக மூன்று நாட்களும், ஆகஸ்ட் மாதத்தில் சுமார் 20 இலிருந்து 25 நாட்களும் வேண்டும் என்று கூறுகிறார். உடனே சந்தானமும் ஆகஸ்ட் மாதத்தில் தேதிகள் பிரச்சனை இல்லை, ஆனால் உடனடியாக மூன்று நாட்கள் என்பது ரொம்பவும் சிரமமாக இருக்கிறது என்று கூறுகிறார். இறுதியாக வி ஜே சித்து விலாக்ஸில் இருந்து தான் பேசுகிறோம் என்று கூறி விடுகிறார்.

எதிர்பார்ப்பு: ஆர்யா மற்றும் பிஜே சித்துவின் இந்த பிராங்க் காலில் இரண்டு விஷயங்கள் ரசிகர்களுக்கு தெரிய வந்துள்ளது. ஒன்று சார்பட்டா 2 படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தொடங்குகிறது என்பது தெளிவாகிறது. அதேபோல் சார்பட்டா 2 மாதிரியான அல்லது சார்பட்டா மாதிரியான அழுத்தம் திருத்தமான ஒரு கதையில் நடிக்க சந்தானத்துக்கு ஆர்வம் இருக்கிறது என்பதும் தெரிய வருகிறது. சந்தானம் காமெடி டிராக்டில் இருந்து விலகி கதாநாயகனாக நடித்து வந்தாலும் கதாநாயகனாகவும் அவர் காமெடி கதாபாத்திரங்களை தேர்வு செய்து வருகிறார். அவர் அதிலிருந்து சற்றே விலகி அழுத்தம் திருத்தமான கதாபாத்திரங்களில் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X