ஏங்க ஹீரோவாவே தான் இனிமே நம்ம சந்தானத்த பார்க்க போறோமா?
சென்னை : விஜய் டிவியின் 'லொல்லு சபா' நிகழ்ச்சி மூலம் பலரது கவனத்தை ஈர்த்த பிரபலமான சந்தானதிற்கு சிம்புவின் இயக்கத்தில் உருவான 'மன்மதன்' படம் மூலம் சினிமாவிற்குள் காமெடியனாக அறிமுகமானார். தனது தனித்துவமான சிறந்த நகைச்சுவை தன்மை மூலம் பல படங்களில் நம்மை சிரிக்க வைத்து வந்தார் சந்தானம் . இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் உருவான 'சிவா மனசுல சக்தி' ,'பாஸ் என்கிற பாஸ்கரன் ' படங்கள் சமயத்தில் சந்தானத்தின் மார்கெட் உச்சத்தில் இருந்தது என்றே சொல்லாம். அப்போது சந்தானத்திற்கு ஒரு நாள் சம்பளம் 1லட்சத்துக்கு மேல் இருந்தது. அதுவரை தமிழ் சினிமாவில் எந்த ஒரு காமெடியனும் ஒரு நாளுக்கு இவ்வளவு பெரிய சம்பளம் கிடைத்தது கிடையாது . அதற்கு பிறகு சந்தானம் காமெடியனாக நடிப்பதில் இருந்து முன்னேறி ஹீரோவாக நடிக்க துவங்கினார் .
இவர் முதலில் ஹீரோவாக 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்தில் நடித்தார் .அதற்கு பிறகு சந்தானம் கொஞ்சம் கொஞ்சமாக மற்ற ஹீரோக்கள் படத்தில் காமெடியனாக நடிப்பதை மறுத்து வந்தார்,அதை தொடர்நது முழு நேர ஹீரோவானார் சந்தானம். சந்தானத்தின் ரசிகர்களுக்கு முதலில் இந்த தகவல் அதிர்ச்சியே தந்தது .

தொடர்ந்து சந்தானம் இனிமே இப்படிதான், தில்லுக்கு துட்டு, சக்க போடு போடு ராஜா, தில்லுக்கு துட்டு 2, ஏ1 போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து வந்தார் . இதில் சந்தானத்திற்கு தில்லுக்கு துட்டு 1 மற்றும் பாகம் 2 நல்ல வெற்றியை பெற்று தந்தது.
சந்தானம் அடுத்த படியாக விஜய் ஆனந்த் இயக்கத்தில் டக்கால்டி என்ற படத்தில் நடித்து வருகிறார் . தொடர்ந்து கார்த்திக் யோகி இயக்கத்தில் டிக்கிலோனா என்று மற்றுமொரு படத்திலும் நடிக்கிறார். அதற்கு பின் ஏ1 பட இயக்குனர் ஜான்சனுடன் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க போவதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் இயக்குனர் கண்ணன் இயக்கும் தலைப்பு வைக்காமல் படப்பிடிப்பு நடத்தப்பட்டு ஒரு திரைப்படத்திலும் சந்தானம் நடித்து வருகிறார். இதில் பிரபல நடிகை 'சவுக்கார் ஜானகி' நடிக்கிறார் என்றும் இது அவருடைய 400வது படம் ஆகும் .
மேலும் சந்தானம் நடிகர் சூரியின் மேனேஜர் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. நடிகர் சூரி தற்போது ஹீரோவாக வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே தமிழ் சினிமாவில் பல ஹீரோக்கள் வந்த வண்ணமாக இருக்கும் போது நகைச்சுவை நடிகர்களும் இப்படி ஒருவர் பின் ஒருவராக ஹீரோக்களாக முன்னேறுவது ஒரு பக்கம் வளர்ச்சியாக இருந்தாலும் மக்கள் நகைச்சுவைக்கு மிகவும் ஏங்கி போவார்கள்.
நகைச்சுவை என்பது அனைவராலும் அவ்வளவு எளிதில் செய்யமுடியாத ஒரு விஷயம். அந்த பாக்கியம் பெற்றவர்கள் நகைச்சுவை நடிகர்கள்.
சந்தானம் என்று ஹீரோ ஆனாரோ அன்று முதல் அவரின் காமெடி மிஸ்ஸிங் என்பது தான் உண்மை. அவர் ஒரு காமெடியனாக மக்களிடம் ரீச் ஆன அளவிற்கு ஹீரோவாக ரீச் ஆக முடியவில்லை. படம் ஓடுதோ இல்லையோ சந்தானம் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி கொண்டே இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











