பவர் ஸ்டாரை விட்டுவிட்டு சோலார் ஸ்டாரைப் பிடித்த சந்தானம்!

By Shankar

சென்னை: கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசனை கலாய்த்த கல்லா கட்டிய சந்தானம், அடுத்த படத்தில் தன்னுடன் காமெடி பண்ண தேர்ந்தெடுத்திருக்கும் நடிகர் யார் தெரியுமா...

தேவயானி வீட்டுக்காரரான ராஜகுமாரன். தனக்குத் தானே சோலார்ஸ்டார் என்று பட்டத்தைப் போட்டுக் கொண்டு திருமதி தமிழ் என்ற படத்தில் ஒரு இன்ச் மேக்கப்படும் கன்னங்கரேலென ஒரு கண்ணாடியும் போட்டுக் கொண்டு ஹீரோவாக திகிலூட்டிய அதே ராஜகுமாரன்தான்!

4 படங்கள் என்னாச்சு?

4 படங்கள் என்னாச்சு?

திருமதி தமிழ் நூறாவது நாள் விழாவில் (??!!) தேவயானியை ஹீரோயினாக வைத்து இன்னும் 4 படங்கள் எடுப்பேன் என்று வேறு மிரட்டிக் கொண்டிருந்தவரை, தன் படத்துக்கு காமெடியனாக்கியிருக்கிறார் சந்தானம். படம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்!

சந்தானத்தைக் கலாய்க்கிறார்

சந்தானத்தைக் கலாய்க்கிறார்

இதுவரை சந்தானம்தான் ஹீரோக்களை ‘கலாய்த்து' காமெடி செய்திருப்பதை பார்த்திருப்போம். முதன் முறையாக இந்த படத்தில் சந்தானத்தையே கலாய்க்கும் சோலார் ஸ்டாராக ராஜகுமாரன் நடித்திருக்கிறாராம்.

பஞ்ச் வேற....

பஞ்ச் வேற....

"காரம் சாப்பிட்டு கண்ணுல தண்ணி வந்து பாத்திருப்ப, கலாய்ச்சுக் கலாய்ச்சே கண்ணுல தண்ணி வந்து பாத்திருக்கியான்னு" ராஜகுமாரன் பேசற ‘பஞ்ச்' வசனங்கள்தான் படத்தின் ஹைலைட்டாக இருக்குமாம்.

ஸ்ரீநாத்

ஸ்ரீநாத்

இந்தப் படத்தை ‘சந்தோஷ் சுப்ரமணியம்', ‘ஈரம்', ‘வேட்டைக்காரன்' உட்பட பல படங்களில் நடித்தவரும், ‘முத்திரை' படத்தை இயக்கியவருமான ஸ்ரீநாத் இயக்குகிறார். இவர் மறைந்த ஜீவாவிடம் பணியாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X