கமல் ஹாஸனுடன் முதல் முறையாக கைகோர்க்கும் சந்தானம்!

கமல் ஹாஸன் - காஜல் அகர்வால் நடிக்கும் படம் உத்தம வில்லன். ரமேஷ் அர்விந்த் இயக்கும் இந்தப் படத்தை இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கிறது.
காமெடிக்கு முக்கியத்துவம் தந்து எடுக்கப்படும் இந்தப் படத்தில் பல முதல் முறைகள் இடம் பெறுகின்றன.
கமல் ஹாஸனுடன் முதல் முறையாக ஜோடி சேருகிறார் காஜல் அகர்வால். அதேபோல, அவர் படத்துக்கு முதல் முறையாக இசையமைக்கிறார் யுவன் சங்கர் ராஜா.
அதேபோல, முதல் முறையாக காமெடி கலந்த வில்லன் வேடத்தில் நடிக்கிறார் கமல் ஹாஸன்,
தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் தயாராகும் இந்தப் படத்தில் முதல் முறையாக கமல் ஹாஸனுடன் கைகோர்க்கிறார் சந்தானம்.
சமீப காலமாக கமல் ஹாஸனை தன் காமெடி காட்சிகளில் சந்தானம் கிண்டலடிப்பதாகக் கூறப்பட்டது. இதனால் கமல் ரசிகர்கள் கடுப்பில் இருந்தனர். இப்போது சந்தானமும் கமலும் இணைவதால் இந்த கசப்பு இனிப்பாக மாற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











