அந்த இடத்தை பெரிதாக்க ஊசி போட்டேனா.. டென்ஷனான சந்தானம் பட நடிகை.. என்ன சொன்னாரு தெரியுமா?
சென்னை: மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் டபுள் ஆக்ஷன் ரோலில் நடித்த தடம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை தன்யா ஹோப்.
ஹரிஷ் கல்யாண் உடன் இவர் இணைந்து நடித்த தாராள பிரபு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பெங்களூருவை சேர்ந்த தன்யா ஹோப் தெலுங்கில் 2016ல் அறிமுகமான நிலையில், தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் நடித்து வருகிறார்.

சந்தானம் நடிப்பில் இன்று வெளியான கிக் படத்தின் ஹீரோயினான இவர் சமீபத்தில் அளித்த பேட்டியின் போது தனது உதடு பற்றியும் அது தொடர்பான ட்ரோல்கள் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.
பெங்களூர் பொண்ணு: கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் நடிகை தன்யா ஹோப் 2016ல் தெலுங்கில் வெளியான அப்பட்லு ஒக்கடுதேவடு படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் தடம், தாராள பிரபு, குலசாமி மற்றும் கிக் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

மேலும், விரைவில் வெளியாக உள்ள வல்லான் மற்றும் கோல்மால் படங்களிலும் இவர் நடித்துள்ளார். தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வந்தாலும் டாப் நடிகர்களுடன் இணைந்து நடிக்க முடியவில்லை என்கிற ஃபீலிங் தன்யா ஹோப்புக்கு சற்றே ஒரு ஓரத்தில் உள்ளது. ஆனால், அதற்கான முயற்சிகளை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.
டிரெண்டிங்கில் தாராள பிரபு டோய்: ஹரிஷ் கல்யாண் உடன் இவர் ஜோடி போட்டு நடித்த தாராள பிரபு படத்தில் இவர் ஆட்டம் போட்ட தாராள பிரபு டோய் பாடல் வீடியோவுக்கு ஏகப்பட்ட நடிகைகளும் இளம் பெண்களும், சீரியல் நடிகைகளும் ரீல்ஸ் போட்டு டிரெண்ட் செய்தனர்.

அந்த பாட்டுத்தான் இவரை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சந்தானத்தின் கிக் படமும் இவருக்கு பெரிய பிரபலத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கிறார்.
உதடை பெரிதாக்க ஊசி: சந்தானத்தின் கிக் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள தன்யா ஹோப் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது உதடுகளுக்கு ஊசிப் போட்டு பெரிதாக்கினேன் என சிலர் விமர்சித்துள்ளனர்.
ஆனால், இது இயல்பான உதடுகள் தான், நான் அதிகமா காஸ்மெடிக் சர்ஜரி எல்லாம் செய்து அழகை கூட்டவோ குறைக்கவோ மாட்டேன் எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











