»   »  அஜீத் படத்தில் அடக்கி வாசிக்கப் போகும் சந்தானம்

அஜீத் படத்தில் அடக்கி வாசிக்கப் போகும் சந்தானம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் மீண்டும் நடிக்க உள்ள படத்தில் சந்தானம் அவரை கலாய்க்க உள்ளாராம்.

என்னை அறிந்தால் படத்தை அடுத்து அஜீத் ஒரு குட்டி பிரேக் எடுத்துள்ளார். இதையடுத்து அவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு சிவா அச்சமில்லை என்ற தலைப்பை தேர்வு செய்ததாக கூறப்படும் போதிலும் 'தல 56' என்பதே தற்காலிக தலைப்பாக உள்ளது.

வீரம் படத்தை போன்றே 'தல 56' படத்திலும் சந்தானம் நடிக்க உள்ளார்.

வீரம்

வீரம்

வீரம் படத்தில் சந்தானத்தின் கதாபாத்திரத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லை. இந்நிலையில் தான் அவர் 'தல 56' படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

சந்தானம்

சந்தானம்

'தல 56' படத்தில் சந்தானத்திற்கு வெயிட்டான கதாபாத்திரமாம். படம் முழுக்க அவர் அஜீத்துடன் வருவாராம்.

கலாய்ப்பு

கலாய்ப்பு

பிற படங்களில் சந்தானம் ஹீரோவுடன் படம் முழுக்க வந்தாலும் அந்த ஹீரோவை கலாய்ப்பார். அதே போன்று 'தல 56' படத்திலும் அஜீத்தை கலாய்க்க போகிறாராம்.

தல ரசிகர்கள்

தல ரசிகர்கள்

பிற ஹீரோக்களை போன்று அஜீத்தை கலாய்த்தால் தல ரசிகர்கள் பொங்கி எழுந்துவிடுவார்கள் என்பதால் அடக்கிவாசிக்க முடிவு செய்துள்ளாராம் சந்தானம்.

English summary
Though Santhanam is going to make fun of Ajith in Thala 56, he will keep it mildly because of Thala fans.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil